பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement
அவனியாபுரம், ஜல்லிக்கட்டு, மதுரை

மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவை, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையை நியமித்துள்ளது. வக்கீல்கள், சரவணன், ஆனந்த், சந்திரசேகர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஆலோசனைக்குழு அமைப்பு :


மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மேடையை, ஆலோசனை குழு ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும், போட்டியில், எந்த சமூகத்தினருக்கோ மற்றும் காளைகளுக்கோ முதல் மரியாதை அளிக்கக்கூடாது . போட்டி நடக்கும் இடத்தில் கட்சி, சமூகம், தொடர்பான கொடி, தலைவர்கள், பிளக்ஸ்போர்டு உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது, இந்த நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவே, பரிசுப்பொருட்களையும், தொகையும் வசூலிக்கும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
12-ஜன-201900:21:29 IST Report Abuse
கலியுக கண்ணன் ஜல்லிக்கட்டின் மீதான தடை வெளிநாட்டு நிறுவனங்களின் சதி — நமது நாட்டுக் காளையினங்களை அழிக்கத் திட்டம் — இது நமது பாரம்பரியத்துக்கு எதிரான போர் சரிதான். வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டுப் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிக்கின்றன என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அது பீட்டா மட்டுமா? கூட்டுக்குடும்பம், பெற்றோரைப் பேணுதல், சகோதர பாசம், ஆடை, பண்டிகைகள், உணவு இதெல்லாம் கூட நமது பாரம்பரியம்தானே… இதனை எதிர்த்த தாக்குதல்களைக் கண்டித்த போதெல்லாம் இதற்கு வேறு சாயம் பூசின ஈயங்கள் இப்போது மட்டும் பாரம்பரியம் என்று கோஷமிடுவது ஏன்? தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதே என்று தடை செய்தபோது பாரம்பரியம் தெரியவில்லை. பொங்கல் வாழ்த்து அனுப்பிய தமிழன் இப்போது காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்ளும்போதும் முத்தம் கொடுக்கும் போதும் பாரம்பரியம் தெரியவில்லை. கூட்டுக்குடும்பத்தை ஒழித்தபோது பாரம்பரியம் தெரியவில்லை. மேல்நாட்டைக் காப்பியடித்து அரைகுறை ஆடைகளை பழக்கப்படுத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை.ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியத்தைத் துறந்து பலர் என்பது சர்வ சாதாரணமான போது பாரம்பரியம் தெரியவில்லை. திருமண வாழ்வை விடுத்து லிவிங் டுகெதர் என்ற கண்றாவியைக் கைக்கொண்டபோது பாரம்பரியம் தெரியவில்லை. ஒருவனுக்கு ஒருத்தியை விட்டுத் தள்ளுங்கள் - இப்போது ஒருவனுக்கு ஒருவன், ஒருத்திக்கு ஒருத்தி என்ற பாதையில் போய்க்கொண்டிருக்கிறதே அதற்கென்ன செய்வது? நமது உணவு வகைகளைக் கைகழுவிவிட்டு பிஸா, பர்கர், கே எஃப் ஸி என்று கடை பரப்பியபோது நமது உணவு வகைகளைக் கேலி செய்து விட்டு வெளிநாட்டு குப்பை உணவுகளை இருகரம் நீட்டி வரவேற்ற போது பாரம்பரியம் தெரியவில்லை. நமது பாரம்பரிய விவசாய மக்களின் உற்பத்திப்பொருளான பதநீர், இளநீர், நன்னாரி இவற்றை ஏளனம் செய்து விட்டு கோக்கையும் பெப்சியையும் குடிக்கும்போது பாரம்பரியம் தெரியவில்லை. கோமாதா எங்கள் குலமாதா என்றால் கொக்கரித்து விட்டு மாட்டிறைச்சி சாப்பிடும் விழா நடத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை. மாடுகள் துன்புறுத்தப்பட்டு, கண்களில் மிளகாய்ப்பொடியைத் தேய்த்து, லாரிகளில் அடைத்து வைக்கப்பட்டு, கொம்புகள் குத்திக் கண்களில் ரத்தம்வழிய அடிமாடுகளாக ஏற்றிச் செல்வதைப் பார்க்கும்போது நமக்கு மாடுகள் மேல் பாசம் பரிதாபம் வரவில்லை. பாரம்பரியம் தெரியவில்லை. பசுவைக் கொல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற போது மாடுகளின் மேல் பாசமோ பரிதாபமோ எழவில்லை. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்ய வேண்டும் என்று வெட்டி நியாயம் பேசினோம். அந்நிய மத பயங்கரவாதிகளின் கூச்சலுக்கு பலியானோம். இன்றைக்கு நமது பாரம்பரியத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறது என்று பொங்கும் நாம், பாரம்பரிய உடைகளையே அணிந்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று பாரம்பரியத்துக்கு ஆதரவாக ஒரு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியபோது அதனை எதிர்த்து அப்பீல் செய்து பாரம்பரியத்தைக் காக்கத் தேவையில்லை என்று தடை வாங்கியது நம்ம போராளிகள்தானே. அப்புறம் இப்போ எந்த முகத்தோடு பாரம்பரியம் என்று நீதிமன்றத்தில் போய் நிற்க முடியும்? இப்படி படிப்படியாக நமது பாரம்பரியம் என்பது பன்முகத்தாக்குதலுக்கு உள்ளானபோது இது அந்த சாதிக்கு ஆப்பு, அது இந்த மதத்துக்கு ஆப்பு, இது எனது சுதந்திரத்துக்கு ஆப்பு, அது அவனது விருப்பத்துக்கு ஆப்பு என்று பல சுயநலக் காரணங்களால் பாரம்பரியத்தை நாமும் கைவிட்டோம். அப்புறம் இப்போ பாரம்பரியம் என்று கத்தி என்ன பிரயோஜனம்? இன்றைக்கு ஜல்லிக்கட்டையே தடை செய்யும் தைரியமும் ஆதரவும் பீட்டாவிற்கு எங்கிருந்து வந்தது என்று தெரிகிறதா? ஆக இழந்த அத்தனை பாரம்பரியத்தையும் மீண்டும் மீட்டெடுப்போம். தாய் தந்தையை வணங்குங்கள் . கல்வி தந்த ஆசிரியரை வணங்குங்கள் . வேண்டியவை தன்னால் வரும்
Rate this:
Share this comment
Cancel
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
12-ஜன-201900:01:02 IST Report Abuse
கலியுக கண்ணன் Good News For the Attn. Of All Feminist Activists and Proponents of Article 14 of the Constitution of India A Few Names Coming Off hand Ms.Trupti Desai (Maharashtra) Ms. Kanaka Durga (Kerala) Ms. Bindu (Kerala) Ms. Mary Sweety (Kerala) Ms. Sasikala (Sri Lanka) Sorry if any names are missing. Apologies. Golden oppurtunity for a Record Feeling as if Landed on Moon Fight for Equal Rights of Ger From 15th to 18th Jan 2019 at Male Dominated Jallikattu In Tamilnadu And Demonstrate your Prowess Also another oppurtunity awaiting At Kumbh Mela Shahi Snaan At 4 am Every Day from. 18th Jan 2019 to 4th March 2019 All the Best In case of any difficulty please Contact Pinarayi Vijayan CM & HM of LDF Govt of Kerala And all Media personnel Note :. Special facilities like ambulances and medical facilities are available for burkha dutt , Indira Jai Singh and other media feminists who are trying very hard to get equal rights SABARIMALA . All ayyappa devotees are ready to volunteer to serve this feminists in case if any emergency . The Nation Wants To Know
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201921:42:13 IST Report Abuse
முக்கண் மைந்தன் மாடுங்கள துன்புறுத்தறதுக்கு ஒரு குழுவாம், அதுக்கு தலம தாங்க ஒரு நீதிபதியாம்.... வெளெங்கிடும்...
Rate this:
Share this comment
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
12-ஜன-201900:04:52 IST Report Abuse
கலியுக கண்ணன்அந்த மாடுகளை பிரியாணி போட்டு சாப்பிட முடியவில்லையே என்ற ஆதங்கமா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X