பதிவு செய்த நாள் :
துபாயில் இந்திய தொழிலாளரை சந்தித்தார் காங்., தலைவர் ராகுல்

துபாய்: ''என், 'மனதின் குரல்' பற்றி சொல்வதற்கு மாறாக, உங்கள் குறைகளை கேட்டறிய விரும்பு கிறேன்,'' என, துபாயில் உள்ள இந்திய தொழிலாளர்களிடம், காங்., தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

துபாய், இந்திய தொழிலாளர், காங்., ராகுல் , Rahul Gandhi, Dubai, Congress leader, business leaders,workers, UAE

வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு நேற்று சென்ற, காங்., தலைவர் ராகுல், அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்தார்;

அப்போது அவர் பேசியதாவது:ஐக்கிய அரபு எமிரேட்சில் கடினமாக உழைத்து, இந்தியாவை பெருமைப்படுத்தும், நம்தொழிலாளர்களுக்கு பாராட்டுகள். இங்கு, நீங்கள் படும் கஷ்டங்களை அறிவேன்; உங்களுக்கு உதவ விரும்புகிறேன்.

இங்கு, என், 'மனதின் குரல்' என்னவென பேச வரவில்லை; மாறாக, உங்கள் குறைகளை கேட்டறியவே விரும்புகிறேன்.உங்கள் உழைப்பு இல்லாவிடில், இங்கு காணும், உயர்ந்த கட்டடங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்றவற்றை உருவாக்கி இருக்க முடியாது. உங்கள் வியர்வை, ரத்தம், நேரம் ஆகியவற்றை அளித்து, இந்த நாட்டை வளப்படுத்தி உள்ளீர்.

Advertisement

உங்களை போல், நானும் ஒரு சாதாரண மனிதனே. எப்போதும், உங்களுக்கு தோள் கொடுக்கவே விரும்புகிறேன். போர்க்களம் துவங்கி விட்டது. வெற்றி நமதே.இவ்வாறு அவர் பேசினார்.பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும், 'மனதின் குரல்' என்ற பெயரில், ரேடியோ நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அதை குறிப்பிட்டு, ராகுல் பேசியது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஜன-201907:45:46 IST Report Abuse

Natarajan Ramanathan"Long live India and it's heritage" என்று சொல்வது எதை? பரம்பரையாக அடிமை சேவகம் செய்வதையா இல்லை ஊழல் செய்வதையா?

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஜன-201922:29:24 IST Report Abuse

Natarajan Ramanathanஒரு 14வயது தமிழ் பெண்ணின் அதிரடி கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பேய் முழி முழித்து நேரலையை பாதியில் நிறுத்தி ஓடியவர்.

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
12-ஜன-201916:34:42 IST Report Abuse

Balaji துபாயில் உள்ள தொழில் அதிபர்களிடம் பிட்சை எடுக்க ராகுல் நடத்திய நாடகம்.பாவம் தொழிலாளர்கள்.

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X