பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ராஜினாமா!
சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா...
பணி மாற்றம் செய்யப்பட்டதால் கடும் அதிருப்தி

புதுடில்லி: சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, அலோக் குமார் வர்மா, 61, புதிதாக அளிக்கப்பட்ட, தீயணைப்பு துறை மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனர் பதவியை ஏற்க மறுத்துள்ளார். தன்னை, ஓய்வு வயதை எட்டிய அதிகாரியாக, உடனடியாக அறிவிக்கும்படி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலருக்கு, அவர் கடிதம் எழுதியுள்ளார்.

சி.பி.ஐ.,  அலோக் வர்மா, ராஜினாமா, பணி மாற்றம், கடும் அதிருப்தி,CBI Director, Alok Verma, resigns, service


சி.பி.ஐ., இயக்குனராக இருந்த, அலோக் குமார் வர்மா மீதான புகார்களை விசாரித்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் நிலை குழு, அவரை, சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து, நேற்று முன்தினம் நீக்கியது. அதைத் தொடர்ந்து, அலோக் குமார் வர்மா, தீயணைப்பு மற்றும் ஊர்க் காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அலோக் குமாருக்கு பதில், சி.பி.ஐ., தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்ட, நாகேஷ்வர ராவ், சி.பி.ஐ., இயக்குனர் பணிகளை தொடர்வதற்கும், உயர்நிலை குழு அனுமதி அளித்தது. இதையடுத்து, அவர் நேற்று பொறுப்பேற்றார்.ஆனால், தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்ட அலோக் குமார், அந்த பதவியை ஏற்க மறுத்துள்ளார்.இயற்கை நீதிஇதுகுறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலருக்கு, அலோக் குமார் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:என்னை பணி மாற்றம் செய்யும் முடிவை எடுப்பதற்கு முன், எனக்கெதிராக, சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து, விளக்கம் அளிக்க, எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.எனக்கு இயற்கையான நீதி கிடைக்கவில்லை. என்னை, சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து நீக்குவதை உறுதிப்படுத்தும் வகையில், ஒட்டுமொத்த விசாரணையும் அமைந்து இருந்தது.சி.பி.ஐ.,யின் விசாரணைக்கு ஆளாகியுள்ள ஒரு நபர், எனக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில், சி.வி.சி., அளித்த அறிக்கை அமைந்துள்ள உண்மையை, உயர் நிலைகுழு எனப்படும், தேர்வுக் குழு பரிசீலிக்கவில்லை.எனக்கு எதிராக புகார் கூறியவர், கையெழுத்திட்ட அறிக்கையை பரிந்துரையாக, சி.வி.சி., அனுப்பி உள்ளது. புகார் மீதான விசாரணையை கண்காணிக்கும், ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.பட்நாயக் முன், புகார்தாரர், ஒருபோதும் ஆகியவற்றின் தலைவராக

ஆஜராகவில்லை.அடையாளங்கள்மேலும், பட்நாயக் அளித்த பரிந்துரை அறிக்கையின் முடிவில், அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் முடிவுகள், தன்னுடையது அல்ல என்பதை குறிப்பிட்டுள்ளார்.அரசு அமைப்புகள் அனைத்தும், ஜனநாயகத்தின் அடையாளங்கள். இதில், முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக, சி.பி.ஐ., திகழ்கிறது.இந்திய போலீஸ் துறையில், அப்பழுக்கற்ற முறையில் திறம்பட பணியாற்றி உள்ளேன். அந்தமான் நிகோபார், புதுச்சேரி, மிசோரம், டில்லி ஆகிய பகுதிகளில், போலீஸ் துறை தலைவராக பணியாற்றி உள்ளேன். டில்லி சிறைகள், சி.பி.ஐ., இருந்துள்ளேன். இந்த அமைப்புகள் அனைத்தும், பல்வேறு சாதனைகள் படைத்துஉள்ளன.கடந்த, 2017, ஜூலை, 31ம் தேதியே, 'சூப்பர்ஆனுவேட்டட்' எனப்படும் பணி ஓய்வை எட்டியிருப்பேன். மாறாக, 2019, ஜன., 31 வரை, இரண்டாண்டு நீடிக்கும் நிலையான பணியாக, சி.பி.ஐ., இயக்குனராக சேவையாற்றி வந்தேன்.தற்போது, சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் நான் இல்லை. தீயணைப்பு துறை, சிவில் பாதுகாப்பு, ஊர்க்காவல் படை இயக்குனர் பதவியை ஏற்கும் வயதை நான் கடந்து விட்டேன். எனவே, இன்று முதல், ஓய்வு வயதை நான் எட்டி விட்டதாக கருதும்படி கோருகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


சுதந்திரம்


இதற்கிடையே, நிருபர்களை நேற்று சந்தித்த, அலோக் குமார் வர்மா கூறியதாவது:உயர் அலுவலகங்களில் நடக்கும் ஊழல்களை விசாரித்து வரும் பிரதான விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,யின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.வெளிப்புற காரணிகளின் பாதிப்பு இன்றி, சி.பி.ஐ., அமைப்பை செயல்பட அனுமதிக்க வேண்டும். சி.பி.ஐ.,யை சீர்குலைக்க, சிலர் முயற்சித்த நிலையில், அதன் புகழை பாதுகாக்க, முடிந்தவரை முயன்றேன்.எனக்கு எதிராக, ஒரேயொரு நபர் கூறிய பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இடமாற்றம் செய்துள்ளனர். இது, மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, நேற்று, சி.பி.ஐ., தற்காலிக இயக்குனராக பதவியேற்ற நாகேஷ்வர ராவ், முன்னாள் இயக்குனர் அலோக் குமார் வர்மா, தான் பதவியில் இருந்த கடைசி நாள் பிறப்பித்த பணி இடமாற்றங்கள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


'கூண்டுக்கிளி'


சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து, அலோக் குமார் வர்மாவை நீக்கியதன் மூலம், கூண்டில் இருந்து, கிளி பறந்து போய், உண்மைகளை வெளிப்படுத்துவதை, உயர்நிலை குழு தடுத்துள்ளது. கூண்டு கிளி, இனி, எப்போதும் கூண்டில் அடைபட்டு கிடக்கும்.


கபில் சிபல் காங்., மூத்த தலைவர்

Advertisementஅஸ்தானாவிடம் விசாரணை


தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர், சதீஷ் பாபு ஸனா அளித்த லஞ்ச புகார் அடிப்படையில், சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த, எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்யக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், அஸ்தானா மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும், 'ராகேஷ் அஸ்தானாவிடம், லஞ்ச வழக்கில் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையை, சி.பி.ஐ., 10 வாரங்களில் முடிக்க வேண்டும்' என, நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும், ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர்வதை தடுக்கும் வகையில், அளிக்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பையும், நீதிமன்றம் நேற்று நீக்கி உத்தரவிட்டுள்ளது.

'நடவடிக்கை எடுத்தது ஏன்?'


சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து, அலோக் குமார் வர்மாவை நீக்குவது தொடர்பான முடிவை எடுத்த உயர்நிலை குழுவில், இடம்பெற்றிருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.கே.சிக்ரியிடம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு தொலைபேசியில் பேசினார்.அப்போது, அலோக் வர்மாவை, சி.பி.ஐ., பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை, கட்ஜு கேட்டுள்ளார். குறிப்பாக, நீக்குவதற்கான முடிவை எடுப்பதற்கு முன், அது தொடர்பாக, அலோக் வர்மாவிடம் விளக்கம் கேட்காதது குறித்து கேள்வி எழுப்பினார்; அதற்கு, சிக்ரி அளித்த பதில்:அலோக் வர்மா மீது கூறப்பட்டுள்ள சில கடுமையான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக அறிந்தோம். எனவே, இதற்கு மேல், சி.பி.ஐ., இயக்குனர் பதவியில், அலோக் வர்மா நீடிப்பது முறையன்று என்ற முடிவுக்கு வந்தோம். இதன் அடிப்படையில் தான், சி.பி.ஐ., இயக்குனர் பொறுப்பிலிருந்து, அவர் நீக்கப்பட்டார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த தகவல், மார்க்கண்டேய கட்ஜுவின், சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
12-ஜன-201917:51:46 IST Report Abuse

Subramanian Arunachalamஇவர் ராஜினாமா செய்த பின் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன ஆகும் . இவர் ஒரு தியாகி என்று பட்டம் சூட்டப்படுவாரோ . இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்று இரண்டு கோடி லஞ்சம் பெற்றார் .

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜன-201914:46:41 IST Report Abuse

Pugazh Vஇந்த அலோக் இட ஒதுக்கீட்டில் வந்த திருட்டு திரவியரா இருக்குமோ? அல்லது டாஸ்மாக் டம்ளரா இல்லை டுமிளனா? வட இந்தியர்களுக்கு வெண்சாமரம் வீசும் பாஜக வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்

Rate this:
Durairaj - Kuwait,குவைத்
12-ஜன-201910:08:25 IST Report Abuse

DurairajHe is a corrupt and NO one agrees to their blunders. He should be given the position back

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X