கழிவறை சுத்தம் செய்யும் பணியிடம் காலி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழிவறை சுத்தம் செய்யும் பணியிடம் காலி

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு கழிவறை சுத்தம் செய்யும் பணிக்கு ஆட்கள் நியமிக்காததால் சுத்தம் செய்யப்படாமல் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்வதற்காக துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனியாக 'ஸ்கேவேன்ஜர்' பணியாளர் நியமனத்தை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே நியமித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கழிவறை துாய்மை செய்யும் பணி செய்த ஊழியர்கள் தற்போது அதே பள்ளியில் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை மட்டுமே துாய்மைப்படுத்துகின்றனர். 6ம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்வதில்லை.அதற்கு தனியாக 'ஸ்கேவேன்ஜர்' பணியாளர்கள் நியமிக்க வேண்டும். ஆனால் இதுவரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தனியாக 'ஸ்கேவேன்ஜர்' பணியாளர்கள் நியமிக்கவில்லை. இதனால் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் ஆட்களை நியமித்து கழிவறையை சுத்தம் செய்து வருகின்றனர்.மற்ற பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யாததால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கழிவறை சுத்தம் செய்ய ஆட்கள் நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X