பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 124 திருத்த மசோதாவை தாக்கல் செய்ததற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இத குறித்து அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அறிக்கை:பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தில் 124வது திருத்தம் செய்யும் மசோதாவை பா.ஜ., அரசு கொண்டு வந்திருக்கிறது.இந்த மசோதாவை காங்., சிவசேனா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றிவிட்டு மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இதனை கடுமையாக எதிர்த்து அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூ., உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி., க்கள் அமளியில் ஈடுபட்டனர்.தமிழக எம்.பி., க்கள் எதிர்ப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டுகிறது. பிரதமர் மோடியால் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய கார்பரேட்டுகளுக்கு மொத்த இந்தியருமே இரையாக்கப்படுகிறார்கள்.தமிழக எம்.பி., க்கள் பகை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க மொத்த உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு பேர் அவையில் அமர்ந்து வாக்களிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படியிருக்க அ.தி.மு.க., மற்றும் தென் மாநில எதிர்க்கட்சி உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததற்கான காரணம் இதுதானோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X