இலவச சைக்கிள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சைக்கிள் வழங்கல்

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 இலவச சைக்கிள் வழங்கல்

கிள்ளை: கிள்ளை மற்றும் கொடிப்பள்ளம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் மோகன், இளங்கோவன் தலைமை தாங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தனஜெயராமன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிவசிங்காரவேல், முன்னாள் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தமிழரசன், ஒன்றிய ஜெ., பேரவைச் செயலர் பொன்னுசாமி, முன்னாள் சேர்மன் அசோகன் முன்னிலை வகித்தனர்.பாண்டியன் எம்.எல்.ஏ., கிள்ளையில் 276, கொடிப்பள்ளத்தில் 92 என 368 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். வார்டு செயலர்கள் காத்தவராயசாமி, ரமேஷ், சிவராஜ், சிவக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X