பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் சார்பில், ரூ.100 கோடியில் 6 புதிய சமூக நலத்திட்டங்கள்

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
துாத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு புதிய சமூக நலத் திட்டங்கள், துாத்துக்குடியில் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.துாத்துக்குடியில், மக்கள் எதிர்ப்பைக் காரணம் காட்டி, கடந்த மே, 28 தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடியது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம், பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த
ஸ்டெர்லைட், சமூக நலத்திட்டங்கள்

துாத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு புதிய சமூக நலத் திட்டங்கள், துாத்துக்குடியில் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

துாத்துக்குடியில், மக்கள் எதிர்ப்பைக் காரணம் காட்டி, கடந்த மே, 28 தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடியது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம், பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஆலை இயங்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெறும் போது, மீண்டும், 100 கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்கு செலவிடத் தயாராக இருப்பதாக தெரிவித்தது. இதன்படி, ஆறு புதிய சமூக நலத்திட்டங்களை, துாத்துக்குடி மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டங்கள் குறித்து, ஆலையின் துணைத் தலைவர், தனவேல் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, ஆறு மாதங்கள், நாங்கள் மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் விருப்படி, ஆறு புதியத் திட்டங்களை உருவாக்கியுள்ளோம். பசுமையானத் துாத்துக்குடி என்ற திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவது. ஆலையைச் சுற்றியுள்ள, 15 கிராமங்களில், 20 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம்.

மாணவர்கள், 1,500 பேர் பயன்பெறும் வகையில், தரமான கல்விச் சாலை.
மகளிர் சுயதொழில்மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம் - 5000 மகளிர் பயனடையும் வகையில்.
இளைஞர்கள் பயன்பெற வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில்.
ஆண்டுக்கு, 1.5 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 100 படுக்கை வசதி உடைய பல்நோக்கு மருத்துவமனை. ஆகிய ஆறு திட்டகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டங்கள் நிறைவேறும் நாளில், துாத்துக்குடியின் சமூக பொருளாதாரம் மேம்பட்டு இருக்கும். ஆலையை மீண்டும் திறப்பதற்கும், இந்த திட்டங்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை செய்த, பல்வேறு சமூக நலத்திட்டகளில் இது அடுத்த நிலை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
12-ஜன-201911:21:17 IST Report Abuse
Viswam ஏறக்குறைய 10 மில்லியன் டன் காப்பர் உற்பத்தி செய்யும் இந்தியா, ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் (4 மில்லியன் டன்) அந்நிய செலாவணி ஈட்ட முடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளது. எல்லா நன்மையையும் சீனாக்காரனுக்கே, ஏனென்றால் அவனுடைய செப்பு ஏற்றுமதி உயர்ந்து வருகிறது.மதமும் சர்ச்சும் அரசை எதிர்ப்பதையும் மற்றும் தொழிற்சாலைகளை மூடும் அபாயத்தை உணர்ந்துதான் சீனாக்காரன் தீடீரன்று புத்தீசல் போன்று முளைக்கும் சர்ச்சுகளை மூடவைத்து அதில் இருக்கும் ஆசாமிகளை லபக்கென்று தூக்கி கண்காணா இடத்துக்கு கொண்டுபோய் நூங்குஎடுப்பது அடிக்கடி நடந்து வருகிறது. அதேபோல இஸ்லாம் மதத்தையும் சீனவழிபடுத்துதல் இப்போது அங்கு துவங்கியுள்ளது. போன வார பேப்பர்களை பார்த்தாலே என்ன நடக்கிறது என்று தெரியவரும். அதுமாதிரி எல்லாம் நமது தேசத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆகையால் மதவெறியர்கள் மதம் மீறி வாழ்வாதாரத்தை குலைக்கும் செயலில் ஈடுபடுவதை தடுக்கமுடியாமல் செகுலர் போர்வையில் தவிக்கும் நிலை இங்குள்ளது. அதே சமயத்தில் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாத மாதிரி தொழிற்சாலைகளை மாற்றி அமைப்பதே நமக்கு நல்லது. தை பிறந்தால் நல்ல வழி பிறக்கும் என்று பொங்கலை கொண்டாடுவோம்.
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201905:05:11 IST Report Abuse
Nepolian S ஏமாற்று வேலை ...மக்களை இவர்கள் நாய்களுக்கு எலும்பு போடுவது போல் நினைத்து விட்டார்கள் .. எலும்பும் நாய்கள் குரைக்கிறதே என்பதால் தான் தற்போது போட முன்வந்துள்ளனர்
Rate this:
Cancel
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
12-ஜன-201901:57:40 IST Report Abuse
கலியுக கண்ணன் ஸ்டெர்லைட்டை ( வேதாந்தா 🕉) எதிர்ப்பு இல்லாமல் திறக்கலாம் ( 2 வழிகள் ) .. 1.அனில் அகர்வால் - கிருஸ்துவனாக மதம் மாறினால்✝ , 2.ஸ்டெர்லைட் வேதாந்த வின் பெயரை - " சகாயமாதா காப்பர்"✝ கம்பெனி என்று மாற்றினால் எதிர்ப்புகள் நீங்கி ... கேன்சர் வரவில்லை என்று ரோமில் கிருஸ்துவ✝ மிஸ்ஸினரிஸ் போப் மிடம் இருந்து - தமிழ்நாடு சர்ச் பாஸ்டர் களுக்கு கட்டளை பிறப்பிக்க படும் ... உடனே மக்கள்ளிடம் ( 1 சண்டே சர்ச் கூட்டம் ) பிறகு டுமிளர்கள் , பொய் போராளிகள் ஆதரவு குடுக்க படும் ..... கேன்சர் என்ற ஒன்று 100% வரவே இல்லை என்று சொல்லப்படும் ... சுடலை ஸ்டாலின் அவர்கள் ரிப்பன் வெட்டி மறுபடியும் திறந்து🤝🏻 வைப்பார்... .. ( இதை விட தெளிவா சொல்ல முடியாது , புரிஞ்சவன்க புரிஞ்சிக்கோங்க.. ) (மீடியா , எதிர்கட்சி எல்லாம் யார் ✝ கண்ட்ரோல் இருக்குன்னு இப்போ புரியுதா ?) யாருக்கு நீங்க ஓட்டு போடணும்னு நீங்க தான் முடிவு பண்ணனும் ... பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு கொடுத்த பிறகு போராட்டம் செய்ய வாருங்கள் என்று கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கிக்கொண்டுள்ளார்கள் மத மாற்ற கும்பல்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X