உழவர் சந்தையில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தையில் ஆய்வு

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலம் உழவர் சந்தையில் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரம், விலை நிலவரங்களை கேட்டறிந்த அவர், விவசாயிகள் அடையாள அட்டை அணிந்துள்ளனரா என பார்வையிட்டார்.பின்னர், உழவர் சந்தையில் பராமரிப்பு பதிவேடுகள், விவசாயிகள் வருகை விபரங்களை ஆய்வு செய்த அவர், பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தினார். வேளாண் அலுவலர் சுகன்யா, உதவி வேளாண் அலுவலர்கள் தனசேகரன், பாலச்சந்திரமூர்த்தி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X