கடலுாரில் 3 இடங்களில் ஆமை முட்டை அடை காக்கும் மையங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 3 இடங்களில் ஆமை முட்டை அடை காக்கும் மையங்கள்

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 3 கடற்கரை கிராமங்களில் ஆமை முட்டைகளை பாதுகாக்க வசதியாக அடை காக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடல் வாழ் உயிரின ஆமைகளை பாதுகாக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆமைகள் முட்டையிடும் காலமான டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கடற்கரை மணல் பரப்பில் முட்டைகளை சேகரித்து பாதுகாக்க வசதியாக அடை காக்கும் மையம் (ெஷட்) அமைக்கப்படுகிறது.அதன்படி, 2018-19ம் ஆண்டிற்கு கடலுார் வனச்சரகத்தில் சொத்திக்குப்பம், பிச்சாவரம் வனச்சரகத்தில் பில்லுமேடு, எம்.ஜி.ஆர்., திட்டு உள்ளிட்ட மூன்று கடற்கரையோரங்களில் ஆமை முட்டைகளை சேகரிக்க ெஷட் அமைக்கப்பட்டுள்ளது. முட்டைகளை சேகரிக்க ஒவ்வொரு இடத்திலும் தலா 5 வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் முட்டைகளை சேகரிக்க உள்ளனர்.மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட முட்டைகள் எண்ணிக்கை மற்றும் அவற்றில் இருந்து வெளியே வந்த குஞ்சுகள் எண்ணிக்கை விபரம்:

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X