கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பொங்கல் பரிசு, அனுமதி, இலவசம்,Madras high court, permits, distribution, Pongal cash gift, sugar card holders

சென்னை: சர்க்கரை மட்டுமே வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ௧,௦௦௦ ரூபாய் ரொக்கம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுள்ள உயர் நீதிமன்றம் 'இந்த தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தாதது ஏன்' என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் 'இதுபோன்ற இலவசங்களை அனைவருக்கும் தராதீர்கள்' என்றும் அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.பொங்கல் பரிசாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு ஆகியவற்றுடன், 1,௦௦௦ ரூபாய் ரொக்கமும் சேர்த்து வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், 1,௦௦௦ ரூபாய் ரொக்கம் வழங்க, அரசுக்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில், டேனியல் ஜேசுதாஸ் என்பவர், மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' : சர்க்கரை மட்டுமே பெறும் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வேண்டாம் என, பெறப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கும், ரொக்கப் பரிசு வழங்க தடை விதித்தது.
நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, கூட்டுறவு மற்றும் உணவு

துறையின் முதன்மை செயலர், தயானந்த் கட்டாரியா தாக்கல் செய்த மனு: சர்க்கரை மட்டுமே பெறுவதற்கான அட்டைதாரர்களில், பெரும்பாலான குடும்பத்தினர், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பின்னணியில் இருப்பவர்கள் தான். சர்க்கரை கார்டுதாரர்கள், 10.11 லட்சம் பேரில், 9ம் தேதி வரை, 4..12 லட்சம் பேருக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட்டு விட்டது. மற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு சேராததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், 1,000 ரூபாய் வழங்க, அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச், நேற்று விசாரித்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடுகையில், ''சர்க்கரை அட்டைதாரர்களில் பெரும்பாலோர், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களாக தான் உள்ளனர். மேலும், அவர்களில், 40 சதவீதம் பேருக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட்டு

விட்டது. எனவே, மற்றவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

விசாரணையின் போது, நீதிபதிகள் கூறியதாவது:


எல்லாருக்கும் ரொக்கப் பரிசு என்பதை, எப்படி ஏற்க முடியும்; தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே, நல திட்டங்கள் சேர வேண்டும். மத்திய அரசு, மானிய தொகையை, வங்கி கணக்கு வழியாக அனுப்புகிறது. அதுபோல, தமிழக அரசும், வங்கி கணக்கில் செலுத்துவதை விட்டு, எதற்காக, ரேஷன் கடைகள் முன், மணிக்கணக்கில் மக்கள் காத்திருக்க வேண்டும். 'பொங்கல் பரிசு வழங்கவில்லை என்றால், தேர்தலில் ஓட்டு போட மாட்டோம்' என, சிலர் பேட்டி அளித்ததாக, செய்திகள் வந்தன. அப்படி, ஒரு நிலையை ஏற்படுத்தியது யார்; ஒரு திட்டத்தை அறிவிக்கும் முன், அதனால், பலன் அடையும் பயனாளிகள் யார் என்பதை, முன்கூட்டி முடிவு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், இலவசமாக

வழங்கப்படும் அரிசி, அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், செய்தி வருகிறது. இலவசமாக வழங்குவதற்கு பதில், குறைந்த விலையில் வழங்கலாம். ஒரு ரூபாய்க்கு, ஒரு படி அரிசி என்று தான், அண்ணாதுரை அறிவித்தார். இலவசங்கள், இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கும்; இலவசங்களை ஊக்குவிக்கக் கூடாது. இதுகுறித்து, முடிவு எடுங்கள்.இவ்வாறு கூறினர்.சர்க்கரை அட்டைதாரர்களில் பெரும்பாலோர், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாக இருப்பதாக, அரசு தரப்பில் கூறுவதால், மீதியுள்ள சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், ௧,௦௦௦ ரூபாய் வழங்க, அனுமதி வழங்குவதாக, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொங்கல் பரிசு 3 நாள் அவகாசம்! :


சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 10.50 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள் மற்றும் 42 ஆயிரம் எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசில் 1,000 ரூபாய் வழங்குவது நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. அதில் சர்க்கரை கார்டுகளுக்கு மட்டும் ரொக்க பணம் வழங்க நேற்று உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ரேஷன் கடைகளில் சர்க்கரை கார்டுதாரர்களுக்கு இன்று முதல் மீண்டும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. வரும், 14ம் தேதி அரசு விடுமுறை என்றாலும் ரேஷன் கடைகள் செயல்பட உள்ளன. இன்று முதல் திங்கள் கிழமை வரை பொங்கல் பரிசு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohith Raja - chennai,இந்தியா
12-ஜன-201922:44:20 IST Report Abuse

Rohith Rajaஇவனுங்க எப்படி நீதிபதி ஆனாங்க ... இட ஒதுக்கீடு.. ஒரு தீர்ப்பு கொடுக்குறாங்க மறுநாளே வேற தீர்ப்பு கொடுக்குறாங்க.. இது சக்கரை பிரச்சனை ஓகே யாருக்கும் பாதகம் இல்ல... இதே மாறி கொலை குற்றவாளி கொள்ளை குற்றவாளி ஜாமீன் வழங்குதல் போன்ற உயிர் சம்பந்தமாக இவங்க தீர்ப்பு சொல்லும் கையில் இருந்தால் என்ன ஆவது... அது மட்டும் இல்லாமல் லட்சம் கேஸ் பெண்டிங் இருக்கும்போது ஏன் இந்த பிரச்சனை முதல்ல எடுக்குறீங்க... என்ன வரைமுறை இருக்கு ஒரு கேஸ் எடுக்க..பேசாம நீதி துறையும் கம்ப்யூட்டரிஸ்ட் பண்ணிடலாம்... தீர்ப்பு சொல்ல அதுக்கு பயம் இருக்காது காசு இருக்காது அரசியல் பயம் இருக்காது... சட்டம் கம்ப்யூட்டர் ஏற்றிவிட்டால் எல்லாரும் தீர்ப்பு சமமாக வரும்

Rate this:
spr - chennai,இந்தியா
12-ஜன-201922:25:55 IST Report Abuse

spr"மத்திய அரசு, மானிய தொகையை, வங்கி கணக்கு வழியாக அனுப்புகிறது. அதுபோல, தமிழக அரசும், வங்கி கணக்கில் செலுத்துவதை விட்டு, எதற்காக, ரேஷன் கடைகள் முன், மணிக்கணக்கில் மக்கள் காத்திருக்க வேண்டும்." நல்ல கேள்விதான் ஆனால் ஏன் நீதிபதிகள் இதனை கட்டாயப்படுத்தவில்லை? கள்ள உறவே கிரிமினல் குற்றமில்லை (ஒருவேளை சிவில் குற்றமாக பதியலாமோ) என்ற தீர்ப்பை அளித்த நீதிபதிகள் வகையினர் இது போன்ற நல்ல விஷயங்களில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஏன்?

Rate this:
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
12-ஜன-201920:14:06 IST Report Abuse

M.COM.N.K.K.குழப்பம் இல்லை ஐயா தவறாக ஒரு பரிசை கொடுத்துவிட்டால் பின்பு வருத்தப்படவேண்டியிருக்கும்

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X