பதிவு செய்த நாள் :
தேசிய கவுன்சில் கூட்டம் : பா.ஜ., மேலிடம் ஆலோசனை

புதுடில்லி: டில்லியில் நேற்று துவங்கிய, பா.ஜ.,வின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டம், பா.ஜ., மேலிடம் ஆலோசனை


விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம், டில்லியில் நேற்று துவங்கியது. பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, கூட்டத்தைதுவக்கி வைத்தார். நாடு முழுவதும் இருந்து வந்திருந்த, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள், பிரசார யுக்திகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோருக்கு, பொதுப்பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்தும், நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு மேற்கொள்ள

Advertisement

வேண்டிய நடவடிக்கைகள், அயோத்தி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த, கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று நடக்கும் நிறைவு நாள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
12-ஜன-201917:03:06 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்ஊழல்திமுக கட்டிங் காங்கிரஸ் கூட்டணி??????

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
12-ஜன-201913:18:02 IST Report Abuse

Appanஇருபத்து ஒண்ணாம் நூற்ரான்டின் ஜோக் ..'தமிழ் நாட்டு பிஜேபி அமைச்சர் பொன்னர் சொல்கிறார் மோடியின் ஆதரவோடு தமிழகத்தல் பிஜேபி 30 க்கும் மேற்பட்ட எம்.பி சீட்டை வெல்லும்,' வட இந்தியாவில் தான்பிஜேபி இருந்தது..இப்போ அதுவும் கரைந்து விட்டது..இப்போ நடக்கிற செயல்களை பார்த்தால் -சி.பி.ஐ டைரக்டரை பதவி நீக்கம் அதுவும் இரவு ஒரு மணிக்கு செய்வது, ஆர்.பி.ஐ கவர்னரை ஓட விட்டது,உச்ச நீதி மன்றத்தை விபசாரிப்பது , RTI க்கு ஆட்களை நியமிக்காமல் அதை முடக்குவது, லோக்தாயத்தை இன்னும் நியமிக்க விலை...இப்படி எல்லா கண்காணிக்கும் அமைப்புகளை மோடி இரும்பு கரம் கண்டிக்கு அடக்குகிறார்..மோடி பிரஸ் மீட்டு செய்வதில்லை..இந்த ஐந்து வருடத்தில் ஒரு முறையும் செய்ததில்லை..அதோடு பாராளுமன்றத்திற்கு வருவதில்லை. எப்போதும் கோட்டு சூட்டு போட்டு வெளிநாட்டு சுத்துவது தான் மோடி... .இவர் எப்படி பி.எம் ஆக நீடிக்க முடியும்..அரசர்கள் கூட அமைசர்களின் எண்ணத்தை அறிந்து செயல் படுவார்கள்..முடிசூட்ட மன்னன் மோடி யாரையும் மதிப்பதில்லை..அப்புறம் எப்படி பிஜேபி இந்தியாவில் இருக்கும்..?

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
12-ஜன-201913:14:03 IST Report Abuse

siriyaarஅமித்சா மோடியை ஜெயிக்க வைக்கிறாறோ இல்லையோ ராகுல் ஜெயிக்க வைப்பார்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X