பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'10 சதவீத இட ஒதுக்கீடு சரியே'

புதுடில்லி: ''பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகாது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

10 சதவீத இட ஒதுக்கீடு , அருண் ஜெட்லி , Quota Bill, Violate, Basic Structure, Constitution, Arun Jaitley

'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான,

அருண் ஜெட்லி கூறியுள்ளதாவது: நம் நாட்டில், காலங்காலமாக சமூக ரீதியில் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காண, ஜாதி, முக்கிய குறியீடாகஉள்ளது. வறுமை என்பது, மதச்சார்பற்ற குறியீடாக உள்ளது. மதம், ஜாதி, இனம் என, அனைத்தையும் கடந்ததாக, வறுமை உள்ளது. எனவே, பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்தல், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகாது.
அரசியல் சாசனத்தின் அறிமுக உரையில், 'சமூக, பொருளாதார, அரசியல் அடிப்படையில், பாரபட்சம் பாராது, அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் நீதி கிடைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதன்மூலம், அரசியல் சாசனத்தின் கட்டமைப்பை உருவாக்குவது எது என்பது தெளிவாக தெரிகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க, பெயரளவில், பிரதான எதிர்க்கட்சி, பரிதாபம் காட்டியது. உள் மனதில் திட்டியபடியே, இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
12-ஜன-201923:02:10 IST Report Abuse

jaganOBC MBC BC வீடு மக்கள் ரொம்ப கொழு கொழு என்று இருப்பார்கள்....இட ஒதுக்கீடு வாங்கி மற்றவர்கள் வரி பணத்தில் தின்பதால்

Rate this:
vel -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201921:06:29 IST Report Abuse

velதிமுக ஒழிக்கப்பட வேண்டும். திமுகவின் அழிவில் தான் நாட்டின் முன்னேற்றமே அடங்கியிருக்கு .

Rate this:
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-ஜன-201916:44:12 IST Report Abuse

S.Baliah Seerஇந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பொருளாதார ரீதியாக சாதீய இட ஒதுக்கீடு என்ற வார்த்தையே இல்லை.சமூக ரீதியாக மட்டுமே கல்வி வேலை வாய்ப்புக்களில் இட ஒதுக்கீடு என்ற அம்பேத்காரின் நிலையில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார் உடன்பாடு இல்லாத காரணத்தாலும்,வேறு சில காரணங்களாலும் அவர் மூவர் குழுவில் இருந்து வெளியேறியதாக ஒரு தகவல்.எப்படியிருப்பினும் பொருளாதார ரீதியாக சாதீய இட ஒதுக்கீடு என்பது சாத்தியம் ஆக வாய்ப்பு இல்லை. முற்பட்ட இனத்தவருக்கு 10 சதவிகித சாதீய இட ஒதுக்கீடு என்று அறிவிக்காதது ஏன்?

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X