கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தை தோல்வியால் தொடர்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தை தோல்வியால் தொடர்கிறது

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விருத்தாசலம்: கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கக்கோரி விருத்தாசலத்தில் நேற்று 5ம் நாளாக காத்திருப்பு பேராராட்டம் தொடர்ந்தது.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு 2016 - 17 மற்றும் 17 - 18ம் ஆண்டுகளுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை, 15 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். 5 ஆண்டுகளாகியும் அரசு மற்றும் ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள கரும்பு பாக்கி தொகை 93 கோடியே 46 லட்சத்து 63 ஆயிரத்து 875 ரூபாயை உடன் வழங்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில், கடந்த 7ம் தேதி காத்திருப்பு போராட்டம் துவங்கியது.மாநில தலைவர் அய்யாகண்ணு, மாநில செயலர் சக்திவேல் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர். அதிகாரிகள், ஆலை நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தாததால், இரவிலும் அங்கேயே தங்கி, போராட்டத்தை தொடர்ந்தனர்.நேற்று 5ம் நாளாக போராட்டம் தொடர்ந்தும், மாவட்ட நிர்வாகமும், ஆலை நிர்வாகமும் கண்டுகொள்ளாததால், மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகளை வைத்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அரசு கண்டு கொள்ளவில்லையென்றால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்திருந்தனர்.தகவலறிந்த ஏ.எஸ்.பி., தீபா சத்யன், தாசில்தார் கவியரசு, சர்க்கரை ஆலையின் துணை பொது மேலாளர் பிரபாகர், கரும்பு ஆய்வாளர் இளங்குமரன், இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையில் 40 கோடி ரூபாயை முதல் கட்டமாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, பண்டிகை நாட்கள் என்பதால், அதன்பின் பணம் செலுத்துவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனையேற்காத விவசாயிகள், 40 கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்தால், உடனடியாக போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம். அதுவரை போராட்டத்தை தொடர்வதாக திட்டவட்டமாக தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகத்திடம் ஆலோசித்து, பதில் தெரிவிப்பதாக கூறி அதிகாரிகள், அங்கிருந்து சென்றனர். பிற்பகல் 12:00 மணியளவில் பேச்சு வார்த்தை நடந்த நிலையில், இரவு 7:00 மணிவரை எந்த தகவலும் கிடைக்காததால், கரும்பு விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X