அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நன்மை செய்பவரை ஆதரிப்போம்!'
தேர்தல் கூட்டணி குறித்து பழனிசாமி பேச்சு

சென்னை: ''தமிழகத்துக்கு யார் நன்மை செய்கின்றனரோ, அவர்களே, மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான், எங்கள் நிலைப்பாடு; அவர்களை தான், நாங்கள் ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு துரோகம் நினைப்பவர்களை, நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தேர்தல், கூட்டணி, பழனிசாமி, ஸ்டாலின், AIADMK, support,  Tamil Nadu, Edappadi k. palanisamy

காஞ்சிபுரம், திருவள்ளூர், வட சென்னை வடக்கு, திருவண்ணாமலை வடக்கு, கடலுார் கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த, அ.ம.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த, 1,400 பேர், அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:மக்களுடைய பிரச்னையை தீர்க்கக்கூடிய ஒரே கட்சி, அ.தி.மு.க., தான். மற்ற கட்சிகள் எல்லாவற்றிலும், குடும்ப அரசியல் தான் தலைதுாக்கி இருக்கும். தி.மு.க.,வை எடுத்துக் கொண்டால், கருணாநிதி மறைந்தார்; அவரது மகன் ஸ்டாலின் வந்து விட்டார். அடுத்து, உதயநிதி வரப் போகிறார். கருணாநிதி இருந்தபோதே, அவரது மகள் கனிமொழி, தயாநிதி, அழகிரி என,


அவரது குடும்பத்தை சேர்ந்தோர் தான், பதவிக்கு வர முடிந்தது. அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன் கூட, உயர் நிலைக்கு வர முடியும்.

தமிழகத்திலும், இந்தியாவிலும், எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால், ஆளக்கூடிய கட்சியில், சிறந்த கட்சி, அ.தி.மு.க.,வாக தான்இருக்க முடியும். ஸ்டாலின், ஒவ்வொரு ஊராட்சியாக சென்று, கூட்டம் போட துவங்கி உள்ளார். ஏற்கனவே, எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்; உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்தவர். அப்போதெல்லாம் கிராமத்திற்கு சென்று பார்க்காதவருக்கு, இப்போது தான் ஞாபகம் வந்திருக்கிறது. நாங்கள், கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர்கள். கிராம மக்களுக்கு, என்ன வேண்டும்; எதை செய்ய வேண்டும் என்பது தெரியும். கிராமத்தையே பார்க்காதவர், ஸ்டாலின். ஏனென்றால், அவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். பதவியில் இருக்கும்போது செய்ய மறுத்து விட்டு, இப்போது, கிராமத்திலிருந்து அரசியல் என்ற, புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து இருக்கிறார். அனைத்து கட்சிகளையும் கூவி அழைத்து, கூட்டணி சேர்க்கிறார். எங்களை பொறுத்தவரை, தமிழகத்துக்கு யார் நன்மை செய்கின்றனரோ, அவர்கள், மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் நிலைப்பாடு; அவர்களை தான் ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு துரோகம் நினைப்பவர்களை, நாங்கள், ஒருபோதும் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

அ.தி.மு.க., என்பது, ஒரு பூஞ்சோலை மட்டுமன்று; பல்லாயிரம் உயிர்களுக்கு

Advertisement

வாழ்வு தரும் மலர்வனம். தொண்டர்களுக்காக, தொண்டர்களால் நடத்தப்படும் இயக்கம்.இங்கு, பணம் பெரிதல்ல; பிறந்து வளர்ந்த பரம்பரை பெரிதல்ல; உழைப்பு இருந்தால் போதும். கடும் உழைப்பும், தலைமை மீது விசுவாசமும் இருந்தால், எந்த ஒரு சாதாரண தொண்டனும், கட்சி தலைமை பொறுப்புக்கு வர முடியும்; முதல்வராக முடியும்.
எந்த எளிய தொண்டனும், அமைச்சர் பதவி பெற முடியும். இருபது தொகுதி இடைத்தேர்தல் எதிர் நிற்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. லோக்சபா தேர்தல், நம்மை எதிர்கொள்ள காத்திருக்கிறது. களம் எதுவாயினும், எதிர்த்து நிற்கும் படை எதுவாயினும், அதை வெற்றி கொள்கிற ஆற்றல், கட்சிக்கு உண்டு. ஒற்றுமையாய் களத்தில் நின்று, ஓய்வறியா உழைப்பை நல்கி, வெற்றிக் கனியை ஈட்டுவோம்.இவ்வாறு, அவர் பேசினார். அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்றார். அமைச்சர், எம்.சி.சம்பத் நன்றி கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜன-201900:28:23 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அதிமுக பூஞ்சோலை, மலர்வனம்.. ஆஹா.. ஹா.. ஆஹா.. அப்படீன்னா குரங்குகளுக்கு அங்கே என்ன வேலை?

Rate this:
12-ஜன-201917:12:29 IST Report Abuse

kavitha  kovai you are great Mr EDDAPPADI PALANISAMY I like you

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
12-ஜன-201914:27:42 IST Report Abuse

Visu Iyerஅதிமுக தனியாக நின்றாலே வெற்றி பெரும்.. கூட்டணி என்ற வலையில் வேறு எந்த கட்சியுடன் சேர்த்தாலும் அது விழும்.. (அது பாஜக வாகவே இருந்தாலும்) அதிமுக கூட்டணி வைக்காமல் தனியாக நின்றாலே அறுதி பெரும்பான்மை பெற முடியும்..

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X