அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மோடியுடன் கூட்டணி கிடையாது'
அடித்துச் சொல்கிறார் ஸ்டாலின்

சென்னை: 'பா.ஜ.,வுடன், தி.மு.க., ஒரு போதும் கூட்டணி அமைக்காது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மோடி, லோக்சபா, கூட்டணி, தேர்தல், ஸ்டாலின், Modi, Vajpayee, DMK, BJP, MK Stalin

அவரது அறிக்கை: 'வாஜ்பாய் கலாசாரத்தைப் பின்பற்றி, நம் பழைய நண்பர்களை வரவேற்க, நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன' என, பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள தன் கட்சி நிர்வாகிகளுடன், வீடியோ கான்பரன்சில்

பேசுகையில், இவ்வாறு குறிப்பிட்டது வியப்பாகவும், விசித்திரமாகவும் உள்ளது. 'சரியான மனிதர்; தவறான கட்சியில் இருக்கிறார்' என, கருணாநிதியால் வர்ணிக்கப்பட்டமுன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், பிரதமர் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது.இது, வழக்கம் போல, மோடியின் பிரசார யுக்தியாகவே உள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு, ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற, ஒரே உன்னத நோக்கத்திற்காக, பா.ஜ., இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில், குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கிய பிரதமர் வாஜ்பாயுடன், தி.மு.க., கூட்டணி வைத்தது. ஆனால், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல; அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வாஜ்பாய் உருவாக்கியது போன்ற

Advertisement

ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற விபரீத மனப்பான்மையில், நான்கரை ஆண்டுகளாக, பிரதமர் மோடி செயல்படுகிறார். அவரது தலைமையிலான, பா.ஜ.,வுடன், தி.மு.க., ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை, மீண்டும் ஆணித்தரமாக விளக்க விரும்புகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
14-ஜன-201907:58:06 IST Report Abuse

S.BASKARANமோடியுடன் சேர்த்தால் மோசடி செய்ய முடியாது போலும்.

Rate this:
மெய்கண்டான் - Chennai,இந்தியா
12-ஜன-201922:15:47 IST Report Abuse

மெய்கண்டான்மக்களே இவர் யாருடன் கூட்டணி வைக்கின்றாரோ அவர்கள் கண்டிப்பாக கொள்கையாடிக்க துணை போகின்றவராகவே இருப்பார்.

Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
12-ஜன-201921:31:25 IST Report Abuse

Sivaஇந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.....

Rate this:
Manian - Chennai,இந்தியா
14-ஜன-201900:14:04 IST Report Abuse

Manianஇப்போது அது நடந்து கொண்டிருக்கவில்லையா ? ...

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X