பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ஏராளமான பெண் பக்தர்கள் சபரிமலையில் தரிசித்துள்ளனர்'

திருவனந்தபுரம்: ''சபரிமலையில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் தரிசனம் முடித்து விட்டனர். பெண்கள் சென்றால், அய்யப்பனின் பிரம்மச்சரியம் கலைந்து விடும் என்பது மூடநம்பிக்கை,'' என, கேரளா அமைச்சர், மணி கூறியுள்ளார்.

சபரிமலை, பெண் பக்தர்கள், தரிசனம், Hundreds, young women,  Sabarimala, MM Mani

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில மின்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சி


பிரமுகருமான, மணி, அடிக்கடி சர்ச்சைக்குரியை வகையில் பேசுவது வழக்கம். சபரிமலை பற்றி பல முறை கடுமையான கருத்துகளை கூறியுள்ளார்.

கொட்டாரக்கரையில் நேற்று
நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான பெண்கள் தரிசனம் செய்துவிட்டனர். இன்னும் தரிசனம் நடத்துவர். அவர்களுக்கு, போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். பெண்களின் வயதை அளவீடு செய்யும் கருவி ஒன்றும் சபரிமலையில் இல்லை;வேண்டுமானால், 50 ஆயிரம் பெண்களை, இருமுடி கட்டி சபரிமலைக்கு அழைத்துச் செல்ல, மார்க்சிஸ்ட் கட்சியால் முடியும். தடுக்க யாரும் வரமாட்டார்கள்; ஆனால், அது கட்சியின் வேலை அல்ல. கோவிலுக்கு போக வேண்டும் என நினைப்பவர்கள் போகட்டும்; அதுதான் எங்கள் நிலை.

Advertisement

பெண்கள் சென்றால், அய்யப்பனின் பிரம்மச்சரியம் கலையும் என கூறுவது ஏமாற்று வேலை. தந்திரிக்கு மனைவி, குழந்தை உண்டு. அதனால், அய்யப்பனுக்கு ஏதாவது நடந்ததா... பந்தளம் அரண்மனைக்கு சொந்தமானது அல்ல சபரிமலை. ஐந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பை செயல்படுத்தும் கடமை, மாநில அரசுக்கு உண்டு. அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, தந்திரிக்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
EJAMAN - doha,கத்தார்
13-ஜன-201900:34:10 IST Report Abuse

EJAMANPROPHET MOHD IS LAST PERSON OF ISLAMIC RELIGION. The FIRST PERSON ON EARTH IS PROPHET ADAM AS PER ABRAHAMIC RELIGIONS.MEANS MILLION YEAR OLD RELIGIONS. Not like thousands as somebody thinking.

Rate this:
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
12-ஜன-201922:16:05 IST Report Abuse

ராஜேஷ்சபரிவாசனின் கருணை ஒன்றும் குறை சொல்வதற்கு இல்லை . நீங்கள் ஆடுங்கள் ,இறை நம்பிக்கையை அபகரியுங்கள் . ஆபரேஷன் மரியாவின் எண்ணத்தை நிறைவேற்றி கொள்ளுங்கள் . அந்த சரிகிரீசன் எங்கள் ஐயப்பனே உங்களுக்கு தண்டனை கொடுக்கட்டும். நான் முகலாயர்கள் பறங்கியர் ஆட்சியை படித்தோம் தவிர பார்த்தது இல்லை . இப்போ பார்க்கிறோம் வாழும் ஓரங்கஜீப்பை பிரானேயே ரூபத்தில்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜன-201915:03:08 IST Report Abuse

Pugazh V//கைக்குழந்தை, வீட்டில் எங்கு வேணுமானாலும் ஒண்ணு ரெண்டு போகலாம் // சுரேஷ். கு. கோவிலுக்கு சிலர் வருவதை இவ்வளவு கீழ்த்தரமாக ஒப்பிடுவது தெய்வ குற்றம். தயவுசெய்து சபரிமலை வருபவர்களை திட்டறேன் பேர்வழின்னு எதையானும் எழுதாதீர்கள். தெய்வ நிந்தனை/ சாமி குத்தம் ஆகிவிடும். ப்ளீஸ்.

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X