பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சென்னையில் இருந்து ஒரு லட்சம் பேர் பயணம்
பொங்கல் சிறப்பு பஸ் இயக்கம் துவக்கம்

சென்னை: சென்னையில் இருந்து, பொங்கலுக்கான சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று துவங்கியது. முதல் நாளில், ஒரு லட்சம் பேர், சென்னையில் இருந்த, சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.

பொங்கல், சிறப்பு பஸ்கள், ரயில், மக்கள், பயணம்


பொங்கல் பண்டிகை, வரும், 15ல், துவங்குகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு வசதியாக, தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. இதன்படி, 14ம் தேதி வரை, 14 ஆயிரத்து, 263 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து, சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று துவங்கியது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், கோயம்பேடு, தாம்பரம் அண்ணாத்துரை பஸ்நிலையம், ரயில்


நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில் இருந்து, வழக்கமாக இயங்கும் 2,275 பஸ்களுடன், நேற்று, 1,284 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றின் வழியாக, சென்னையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கு, ஒரு லட்சம் பேர்பயணித்தனர்.

ஆம்னி பஸ்களில் கட்டணம் எவ்வளவு? :


தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், சென்னையில் இருந்து, வெளியூர்களுக்கு செல்ல, அதிகபட்ச கட்டணம், பஸ்களுக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைவிட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, கோவைக்கு, 1,300 முதல், 1,950 ரூபாய்; மதுரைக்கு, 1,150 முதல், 1,850 ரூபாய்; தேனிக்கு, 1,150 முதல், 1,850 ரூபாய்; நெல்லைக்கு, 1,500 முதல், 2,200 ரூபாய்; தஞ்சைக்கு, 900 முதல், 1,450 ரூபாய்; திருவாரூருக்கு, 900 முதல், 1,450 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, முக்கிய ஊர்களுக்கான கட்டண விபரத்தை, பயணியர் அறிய, தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கோயம்பேடு பஸ் நிலையத்தில், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

ரயில்களில் நெரிசல் :


சென்னை எழும்பூரில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், பொங்கல் பண்டிகையையொட்டி, முன் கூட்டியே, அனைத்து வகுப்பு இடங்களும், முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. அதனால், எழும்பூரில் இருந்து, நேற்று மதியம் இயக்கப்பட்ட, வைகை, பல்லவன்; மாலையில் இயக்கப்பட்ட, திருச்செந்துார், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில், முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், பயணியர் கூட்டம் அதிகம் இருந்தது. இரவு நேரம் இயக்கப்பட்ட ரயில்களிலும், முன்பதிவில்லா பெட்டிகளில், பயணியர் கூட்டம் அதிகம் இருந்தது.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
13-ஜன-201900:41:26 IST Report Abuse

Subramanian Sundararamanஇனி விவசாயம் தமிழ் நாட்டில் தனி மனிதர்கள் செய்வது கடினம். தண்ணீர் , விதை , உரம், பூச்சிக்கொல்லி மருந்து , ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல பிரச்சனைகள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விவசாயம் கார்பொரேட் கையில் போவது தவிர்க்க முடியாது. ஆகையினால் ஆங்காங்கே தொழில் ,மென் பொருள் பூங்காக்களை ஏற்படுத்தி படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும்.விவசாயத்திலும் பகுதி நேர பணி செய்யலாம். பெரு நகரங்களில் கிராமத்திலிருந்து , நகரங்களிலிருந்து குடி பெயர்வோரை தவிர்க்க முடியும். அப்படி இல்லாவிட்டால் இது மாதிரி ஒரே நேரத்தில் பயணம் செய்வதால் ஏற்படும் போக்குவரத்துக்கு பிரச்சனைகளை எதிர் காலத்தில் சமாளிக்க முடியாது.

Rate this:
Shekar - Mumbai,இந்தியா
13-ஜன-201912:09:06 IST Report Abuse

Shekarநீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் நம் தமிழ்நாட்டில் பல விவசாயிகள் சிறிய நிலம் உடையவர்கள், இவர்கள் ஒன்றுபட்டு கூட்டுறவு முறையில் ஒன்றுபட்டு (co-op Society) முறையில் விவசாயம் செய்தால், உற்பத்தி செலவு குறையும், லாபம் பெருகும், விவசாயம் இயந்திரமயமாக்குவது எளிது, ஆள் பற்றாக்குறை போன்ற பிரச்சனை வராது. அனால் இதை செய்ய நம்மில் ஒற்றுமை நேர்மை அரசியல் தலையீடு இல்லாமை தேவை, நடக்குமா?.... ...

Rate this:
jagan - Chennai,இந்தியா
12-ஜன-201923:01:03 IST Report Abuse

jaganஇதிலும் OBC MBC BC மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு முறையில் குறைந்த விலையில் (அவா மட்டும் அதிக கட்டணம் வசூல் செய்ய வேண்டும் ) தரவேண்டும். அது தான் சமூக நீதி...அதாவது, அடுத்தவன் வரி பணத்தில் திருடி தின்பது

Rate this:
Raj -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201914:13:37 IST Report Abuse

RajThambi Mayilvaganam veli gate ah ezhuthu moodoopa..chennai moochu vidatum..

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X