வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசு பணியாளர் தேர்வு பயிற்சி வகுப்பு துவங்கியது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா சிறப்புரை நிகழ்த்தினார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ வட்டம் மூலம் பயின்று, கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் பாரதிதாசன், வேளாண் துறைக்கான தேர்வில் வெற்றி பெற்று, பணி நியமனம் பெற உள்ள கிருத்திகா ஆகியோர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறித்து விளக்கினர்.இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X