பிரபு எம்.எல்.ஏ.,விற்கு உற்சாக வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரபு எம்.எல்.ஏ.,விற்கு உற்சாக வரவேற்பு

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பிரபு எம்.எல்.ஏ.,விற்கு உற்சாக வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,- பிரபுவுக்கு மாடூர் டோல்கேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, விழப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில், கடந்த 7ம் தேதி, இதுகுறித்து பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், வெளிநடப்பு செய்தார். அடுத்தநாள் கள்ளக்குறிச்சி தனி மாவட்ட மாக தமிழக முதல்வர் அறிவித்தார்.அதனை தொடர்ந்து பிரபு எம்.எல்.ஏ., மெரினா கடற்கரையில் உள்ள ஜெ., சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தொகுதிக்கு வந்த பிரபு எம்.எல்.ஏ.,விற்கு மாடூர் டோல்கேட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் அ.ம.மு.க., மாவட்ட செயலர் கோமுகி மணியன், மாவட்ட அவைத்தலைவர் பாண்டியன், மாவட்ட பேரவை செயலர் பால்ராஜ், மாவட்ட மாணவரணி செயலர் சீனிவாசன், மாவட்ட வழக்கறிஞரணி செயலர் சம்பத்குமார், மாவட்ட மகளிரணி செயலர் தனலட்சுமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் அமுதமொழி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் பரத், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலர் மதுசூதனன், ஒன்றிய செயலர்கள் கள்ளக்குறிச்சி மதுசூதனன், சின்னசேலம் ராஜேந்திரன், சங்கராபுரம் மாயாவேலாயுதம், தியாகதுருகம் தங்கதுரை, நகர தலைவர்கள் சின்னசேலம் தமிழ்மணி, சங்கராபுரம் ராம்குமார், கள்ளக்குறிச்சி நகர மாணவரணி செயலர் செல்வம், வர்த்தகரணி செயலர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X