சோலார் விளக்குபொறியால் பூச்சி கட்டுப்பாடு; மானியத்திட்டங்களால் பயன்பாடு அதிகரிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோலார் விளக்குபொறியால் பூச்சி கட்டுப்பாடு; மானியத்திட்டங்களால் பயன்பாடு அதிகரிப்பு

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை: பழவகை மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விளக்கு பொறி பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

உடுமலையில் மா, கொய்யா, சப்போட்டா, நாவல், கறிப்பலா உள்ளிட்ட பல்வேறு வகையான பழவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நீண்டகால மரவகையை சேர்ந்த பழ வகை பயிர்களில் பூச்சி தாக்குதல்களால் மகசூல் பாதிக்கும் நிலை காணப்படுகிறது.குறிப்பாக மா, கொய்யா, சப்போட்டா போன்றவற்றில் வண்டு தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது. விவசாயிகளும் பல்வேறு வழிகளில் போராடி கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வந்தனர். இந்நிலையில், இயற்கை முறையில் சோலார் விளக்குப்பொறி பயன்படுத்தி கட்டுப்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் சோலார் விளக்குப்பொறிகளில் சிக்கும் வண்டுகள் மீண்டும் எழ முடியாமல் இறக்கின்றன. இதனால், 50 சதவீதத்துக்கும் மேல் வண்டுகளை கட்டுப்படுத்த முடிவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், ' ரசாயன உரங்களால் எந்தவித நோய்க்கும் முழுமையான தீர்வுகள் கிடைப்பதில்லை. இதனால், இயற்கை வழிமுறைகளை பின்பற்றுகிறோம். பழங்களில் தாக்குதலை ஏற்படுத்தும் வண்டுகளுக்கும் இயற்கை முறையில் சோலார் விளக்குபொறி பயன்படுத்தப்படுகிறது.அதன், மணத்துக்கு கவிர்ந்து இழுக்கும் வண்டுகள் பொறியில் சிக்கிக்கொண்டு இறக்கின்றன. இதற்கு வேளாண், தோட்டக்கலைத்துறையில் மானியங்களும் வழங்குவது உபயோகமாக உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X