வனப்பாதுகாப்பு படை சார்பில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பாதுகாப்பு படை சார்பில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனப்பாதுகாப்பு படையினர், அரசின் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதும், வனத்துறை ஊழியர்களை கண்காணிக்கவும், ரோந்து சென்று வனக்குற்றங்களை கண்டறியவும், வனப்பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதும் உள்ள, ஆறு வனச்சரகங்களில் வனப்பாதுகாப்பு படையினர், பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும், ஆழியாறு, அட்டகட்டி, சேத்துமடை உள்பட அனைத்து சோதனைச்சாவடியிலும், வனத்துறை பணியாளர்கள் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் முறையாக சோதனையிட்டு, பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்கிறார்களா என கண்காணிக்கின்றனர். குரங்கு அருவி, அட்டகட்டி, டாப்சிலிப் உள்பட சுற்றுலாப்பயணிகள் அதிகமுள்ள பகுதியில், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். சுற்றுலாப்பயணிகளிடம் நோட்டீஸ் வழங்கி, அரசின் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். சுற்றுலா பயணிகளும் வனத்தில் பிளாஸ்டிக் கவர்களை வீசி, வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X