திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மாணவர்கள் ஆர்வத்துக்கு பரிசு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மாணவர்கள் ஆர்வத்துக்கு பரிசு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆனைமலை: திருப்பாவை மற்றும் திருவெண்பாவை ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் நேற்று, கோவில் வளாகத்தில் திருப்பாவை மற்றும் திருவெண்பாவை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது.இதில், ஆனைமலை அரசு மேல்நிலை பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி, வி.ஆர்.டி., பெண்கள் மேல்நிலை பள்ளி, காளியாபுரம் பழனியம்மாள் பள்ளி, பெரியபோது அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 90 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் திருப்பாவை, திருவெண்பாவை பாடல்கள் பாடி அசத்தினர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள், காந்தியடிகள் சுயசரிதை, டிக்ஷனரி உள்பட பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையாளர் ஆனந்த், கண்காணிப்பாளர் தமிழ்வானன், புலவர் லோகநாதன் பங்கேற்றனர்.கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், 'மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை, திருவெண்பாவை முற்றோதல் நடப்பது வழக்கமாகும். அதன் ஒரு பகுதியாக, மாணவர்களிடம் ஆன்மிக சிந்தனையை வளர்ப்பதற்காக ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X