புயல் பாதிப்பால் கரும்பு வரத்து குறைவு; விலை அதிகரிக்க வாய்ப்பால் கவலை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புயல் பாதிப்பால் கரும்பு வரத்து குறைவு; விலை அதிகரிக்க வாய்ப்பால் கவலை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கரும்பு விற்பனை கடந்தாண்டை விட, 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், விலை உயரும் நிலை உள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து, மார்க்கெட்டுக்கு கரும்பு, மஞ்சள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயராகி வருகின்றனர். இதற்காக, பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு கரும்பு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.கரும்பு வியாபாரிகள் கூறியதாவது:நத்தம், கொட்டாம்பட்டி, மேலுார், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு விற்பனைக்காக ஆண்டுதோறும் கொண்டு வரப்படுகிறது. கஜா புயல் பாதிப்பு காரணமாக கரும்பு வரத்து குறைந்துள்ளது; கடந்தாண்டை விட இந்தாண்டு, 50 சதவீதம் வரத்து குறைந்தது. இதனால், விலையும் உயர்ந்து காணப்படுகிறது.கடந்தாண்டு ஒரு கட்டு, 300 - 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கரும்பு, தற்போது, 450 - 550 ரூபாயாக உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, வியாபாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X