தையல் தொழிலாளர்களுக்கு கூலி குறைப்பு; வறுமையில் தவிக்கும் பெண்கள் வேதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தையல் தொழிலாளர்களுக்கு கூலி குறைப்பு; வறுமையில் தவிக்கும் பெண்கள் வேதனை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கிணத்துக்கடவு; நீண்ட நாட்களாக தொழில் நலிவடைந்த நிலையிலும், தையல் கூலி மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், தையல் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

உடுமலை, பூளவாடி, கிணத்துக்கடவு மற்றும் காங்கேயம் பகுதிகளில், மலிவு விலையில் மொத்த மார்க்கெட்டுகளில் விற்கப்படும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் சாதாரண விலைக்கு கிடைக்கும் ஆடை ரகங்கள், செவ்வாய்கிழமை தோறும், ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் மொத்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. காட்டன் சட்டைகள், காடா பனியன்கள், பாவாடைகள், பட்டாவேட்டி எனப்படும் ஆண்களின் உள்ளாடைகள் பெரும்பாலும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் குடிசை தொழிலாக உற்பத்தி செய்யப்படுகின்றன.100 ஆண்டுகள் கடந்த இத்தொழிலில், காங்கேயம், கிணத்துக்கடவு, அரசம்பாளையம், பூளவாடி, மயிலேறிபாளையம் உள்ளிட்ட இடங்களில் இன்றும் பாரம்பரிய தொழிலாக நடக்கிறது.

கடந்த சில ஆண்டுகள் வரை, ஆண்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். கூலி கட்டுப்படியாகாத நிலையில், பெரும்பாலானவர்கள், இத்தொழிலை கைவிட்டு, திருப்பூர் சென்றுவிட்டனர். ஒரு சிலர் கிடைக்கும் வேலைக்கு செல்கின்றனர். ஆனாலும், இத்தொழிலை கைவிடாமல் இருக்க, சமீப ஆண்டுகளாக, வீட்டுபெண்கள் தையல் தொழிலை மேற்கொண்டுள்ளனர். தற்போது, பட்டாவேட்டி எனப்படும் ஆண்களின் டிராயர் மட்டுமே தைக்கப்படுகிறது. இதற்கு கடந்த காலங்களில், ஒரு டிராயர் தைக்க, ரூ.4 கூலியாக தரப்பட்டது. தற்போது, அதையும் மொத்த வியாபாரிகள், மூன்று ரூபாயாக குறைத்து விட்டனர். இந்த பட்டாவேட்டி டிரவுசர்கள், ரூ.35 - 50 வரை மார்க்கெட்டில் விற்பனையாகிறது.

இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, தையல் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கிட வேண்டும். அதை விடுத்து, கூலியை குறைப்பது என்பது பெண் தொழிலாளர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் செயலாகும். தற்போதைய நிலையில், 100 நாள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு கூட, 220 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது என, மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X