தக்காளி விலை கிடுகிடு உயர்வு! வாழைத்தாருக்கும் கிராக்கி அதிகரிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை கிடுகிடு உயர்வு! வாழைத்தாருக்கும் கிராக்கி அதிகரிப்பு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணத்துக்கடவு: வரத்து சீராக இருந்தும், பண்டிகை சீசன் காரணமாக, தக்காளி மற்றும் வாழைத்தார் விலை சந்தைகளில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மொத்த காய்கறி மார்க்கெட்களில், சீசனுக்கேற்பவரத்து அதிகரிக்கும், அதற்கேற்ப விலையும் கூடும், குறையும் என்பது வழக்கம். தற்போது பொங்கல் சீசன் என்பதாலும், ஒரு சில காய்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படுவதாலும் கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வர்த்தகம் களை கட்டியது.நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, வரத்து அதிகமிருந்தும், 14 கிலோ எடை கொண்ட ஒருகூடை தக்காளி, 400 ரூபாய்க்கு விற்றது. பீர்க்கங்காய், 30, சுரைக்காய், 10, கத்தரிக்காய், 20 கிலோ கொண்ட பை, 150 - 300 ரூபாய்க்கும் விற்றது. மாட்டுப்பொங்கலில் அதிகம் பயன்படும் அரசாணிக்காய், பூசணிக்காய் ஆகியன கிலோ, 3 ரூபாய்க்கு விற்றது. பயிறு வகைகள், 20 - 30 ரூபாய், வெண்டைக்காய், 35 ரூபாய்க்கும் விற்றது. நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக, பூவன் வாழைத்தார் ஒன்று, 450 முதல், 600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில், ஒரு கூடை தக்காளி, 300 ரூபாயாக இருந்தது. வாழைத்தார், 250 - 300 ரூபாய்க்கும் விற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விலை நிலவரம், அடுத்த இரண்டு நாட்களில் மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X