பனை ஓலைகளால் தயாராகும் பட்டி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனை ஓலைகளால் தயாராகும் பட்டி!

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பனை ஓலைகளால் தயாராகும் பட்டி!

கிணத்துக்கடவு : மாட்டுப்பொங்கல் நாளில், பாரம்பரிய முறைப்படி, பட்டி தயாரிப்புக்காக பனை ஓலைகள் வெட்டி, விளைநிலங்களில் உலர வைக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளின் உழைப்புக்கும், தியாகத்துக்கும் மரியாதை செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, வழிபடும் இடத்துக்கு கொண்டு வரப்படும். பொங்கலிடும் இடத்தில், மூங்கில் குச்சிகளால் தயாரிக்கப்படும் அல்லது பனை ஓலைகளை கொண்டு தயாரிக்கப்படும் தட்டிகள், கால்நடைகளை கட்டி வைக்கும் பட்டிகள் எனப்படுகின்றன. பொங்கல் நாளில், பட்டிகள் தயாரிப்பில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இதற்காக தென்னை ஓலைகள், பனை ஓலைகள் பயன்படுத்துவது வழக்கம்.

சமீப காலமாக, இவ்வகை பாரம்பரிய பட்டிகள் தயாரிப்பு கைவிடப்பட்டு, தகர 'ஷீட்'களை வைத்து பொங்கலிடுகின்றனர்.ஆனாலும், பாரம்பரியம் மறக்காத, பனைமரங்களை வளர்க்கும் விவசாயிகள், ஆண்டுக்கு ஒருமுறை பனை ஓலைகளை வெட்டி, காயவைக்கின்றனர். பொங்கல் நாளுக்கு முந்தைய நாள், பட்டிதயாரிப்பில் ஓலைகளை பயன்படுத்துகின்றனர்.

மாட்டுப்பொங்கலுக்கு தொடரும் பாரம்பரியம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X