சுகப்பிரசவத்தில் அதிக எடையுடன் குழந்தை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகப்பிரசவத்தில் அதிக எடையுடன் குழந்தை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில், நான்கு கிலோ, 400 கிராம் எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ், '108' ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி ரத்தினபிரியா, 28; இரண்டாவது பிரசவத்துக்காக, பொள்ளாச்சி ரெட்டியாரூர் கோடங்கிப்பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக ரத்தினபிரியா அனுமதிக்கப்பட்டார். நேற்று பிரசவ வலி ஏற்பட்ட பெண் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.டாக்டர் வித்யாநந்தினி தலைமையில், செவிலியர்கள் சுப்புலட்சுமி, ரேவதி மாலா ஆகியோர் அடங்கிய குழுவினர், பிரசவம் பார்த்தனர். அப்போது, சுகப்பிரசவமாக ஆண் குழந்தை பிறந்தது.

டாக்டர் வித்யா நந்தினி கூறியதாவது: ரத்தின பிரியாவுக்கு முதல் குழந்தையும் சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை எடை அதிகமாக உள்ளதால், 'சிசேரியன்' செய்ய வலியுறுத்தினார். அவருக்கு நம்பிக்கை கொடுத்ததால், சுகப்பிரசவமாக குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கு 'டயபடிக்' உள்ளதால், அதிக எடையுடன் குழந்தை பிறந்தது. நான்கு கிலோ, 400 கிராம் எடையுடன் சுகப்பிரசவம் ஆனது இது தான் முதல் முறையாகும்.

குழந்தை தோல் தசை பெரிதாக இருப்பதால், பிரசவம் பார்க்கும் போது கவனமுடன் குழந்தை வெளியே எடுக்க வேண்டியதுள்ளது. சுகப்பிரசவத்தில், 4.4 கிலோ எடையில் குழந்தை பிறந்துள்ளது இது தான் முதல் முறையாகும். குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X