ஸ்வீடன் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்வீடன் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஸ்வீடன் செல்லும்  அரசு பள்ளி மாணவர்கள்

நத்தம்:நத்தம் பகுதி அரசு பள்ளி மாணவர்கள் ஐரோப்பாவின் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வாகியுள்ளனர்.தமிழ கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ம் வகுப்பில் சிறந்த மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்ப உள்ளனர். இதற்காக முதற் கட்டமாக அறிவியல், தொழில்நுட்ப பிரிவில் மாநில அளவில் 50 பேர் தேர்வாகியுள்ளனர்.சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் 9 ம் வகுப்பு மாணவர் சவுந்தரராஜன், 10 ம் வகுப்பு மாணவர் கனகவேல் தேர்வாகியுள்ளனர். இவர்கள் 2016-17 கல்வியாண்டில் தேசிய அறிவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளனர்.இவர்கள் ஜன.21 ல் சென்னையிலிருந்து புறப்பட்டு, பின்லாந்தின் ெஹல்சிங்கி நகருக்குச் செல்கின்றனர். அங்கு தொழிற்சாலைகள், பல்கலைக் கழகங்கள், ஆய்வகங்கள், ரோபோடிக் லேப், அறிவியல் மையங்களை பார்வையிடுவர். ஜன.26 ல் ஸ்வீடன் தலைநகர் ஸடாக் ேஹாம் சென்று கலாசார அருங்காட்சியகத்தை பார்வையிடுவர். இருவேறு பள்ளிகளில் கற்பிக்கும் முறை அறிதல், மாணவர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர். பிப்.3 ல் சென்னை திரும்புகின்றனர். இவர்களை முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், தலைமையாசிரியர் பிரசன்னா ஜூலியட், ஆசிரியர்கள் சுப்பு உலகநாதபாண்டியன், உமா பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X