மாநகராட்சி வரி உயர்வை குறைக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி வரி உயர்வை குறைக்க வலியுறுத்தல்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:'மாநகராட்சியில் வரி உயர்வை குறைக்க வேண்டும்'என, திண்டுக்கல் நடைப்பயிற்சி கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.இந்த அமைப்பின் தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை: 'மாநகராட்சியில் குழாய் வரி, வீட்டு வரியை குறைக்க வேண்டும். ரவுண்ட் ரோட்டில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள ரவுண்ட் ரோட்டை சீரமைக்க வேண்டும். ரவுண்ட் ரோட்டில் இருக்கைகள் அமைக்க வேண்டும். ஆக்கி ரமிப்புகளை அகற்ற வேண்டும். ஜிக்கா குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் பேவர் பிளாக் கற்கள் அமைத்து தர வேண்டும். தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும். ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும். இதனால் அவ்வழியே செல்லும் குழந்தைகள், பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் செல்வதை, நிறுத்துவதை தடுக்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X