பொது செய்தி

தமிழ்நாடு

குதிரைக்கு குடல், 'ஆப்பரேஷன்' : நெல்லை டாக்டர்கள் சாதனை

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (6)
Advertisement
குதிரைக்கு குடல், 'ஆப்பரேஷன்' : நெல்லை டாக்டர்கள் சாதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில், ஒன்றரை வயது குதிரைக்கு, குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.கேரளாவைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவர், தென்காசியில் குதிரை பண்ணை வைத்து, 10க்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்த்து வருகிறார். இதில், ஒன்றரை வயது பெண் குதிரை, இரண்டு வாரங்களுக்கு முன், சாணம் போட முடியாமல், வயிற்று வலியால் அவதிப்பட்டது.குதிரையை, 2ம் தேதி, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு ஜார்ஜ் அழைத்து வந்தார். 'டீன்' ஜான்சன் ராஜேஷ்வர் தலைமையிலான டாக்டர்கள் குழு, குதிரையை பரிசோதனை செய்து, 'ஸ்கேன்' செய்து பார்த்தனர். இதில், குதிரையின் வயிற்று பகுதியில் குடல் வீக்கம் இருப்பதும், உள்ளே பிளாஸ்டிக் உருண்டைகள், நுால் இருப்பதும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, குதிரைக்கு ஊசி மற்றும் வாய் வழியாக மருந்துகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, குதிரைக்கு மயக்க மருந்து கொடுத்து, குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின், குதிரை சாணம் போட்டு, சகஜ நிலைக்கு திரும்பியது.
கால்நடை டாக்டர்கள் கூறும்போது, 'குதிரைக்கு குடல் அறுவை சிகிச்சை என்பது, அரிதான ஒன்றாகும். இந்தியாவிலேயே முதலில், இங்கு தான், இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நுால், பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதால், குடலில் வீக்கம் ஏற்பட்டது. உரிய நேரத்தில் சிசிச்சை மேற்கொண்டதால், குதிரை உயிர் பிழைத்தது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜன-201909:35:48 IST Report Abuse
Srinivasan Kannaiya ஐந்தறிவுதானே என்று நினைக்கும் ஆறறிவு உள்ள மனிதர்கள் மத்தியில் இந்த நல்ல உள்ளங்கள்... குதிரையின் சார்பாக வணக்கம், வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜன-201909:33:58 IST Report Abuse
Srinivasan Kannaiya இதயமுள்ள மருத்துவர்கள்..
Rate this:
Share this comment
Cancel
Human -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201916:42:52 IST Report Abuse
Human Root cause is Plastic ball, please try all your efforts to completely avoid plastic items, we are harming every living beings with plastics
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X