எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்வமின்மை!
காற்றாலை மின்சாரம் கொள்முதல்
ஆர்வம் காட்டாத முதலீட்டாளர்கள்

காற்றாலை மின்சாரத்திற்கு, குறித்த காலத்தில் பணம் தராதது, குறைந்த விலை உள்ளிட்ட காரணங்களால், மின் வாரியம் கோரிய, 'டெண்டரில்' பங்கேற்க, முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.

காற்றாலை மின்சாரம் கொள்முதல் : ஆர்வம் காட்டாத முதலீட்டாளர்கள்

தமிழகத்தில், 8,322 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, மின் வாரியம் வாங்குகிறது.

ஒரு யூனிட் காற்றாலை மின்சாரம், அதிகபட்சமாக, 2.65 ரூபாய் என்ற விலையில், 500 மெகா வாட் வாங்க, மின் வாரியம், 2018 நவ., இறுதியில், 'டெண்டர்' கோரியது. இதில்பங்கேற்க, டிச., 28 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. டெண்டரில், தேர்வாகும் நிறுவனங்களுடன், இம்மாத இறுதியில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், ஒப்பந்தம் செய்ய மின் வாரியம் திட்டமிட்டது.
டெண்டரில் நிறுவனங்கள் பங்கேற்காததால், கடைசி தேதி, ஜன., 11 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்தது. அதிலும், நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என, தெரிகிறது. இதனால், கடைசி தேதியை, மீண்டும் நீட்டிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, முதலீட்டாளர்கள் கூறியதாவது: முந்தைய ஆண்டுகளை விட, தற்போது, மின் வாரியம், அதிக காற்றாலை மின்சாரம்

Advertisement

வாங்குகிறது. இருப்பினும், முழுவதுமாக வாங்குவதில்லை. காற்றாலை மின்சாரத்திற்கு, குறித்த காலத்தில் பணம் வழங்குவதில்லை.தற்போது, குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்க, டெண்டர் கோரியுள்ளது. அப்படி இருக்கும் சூழலில், எப்படி, காற்றாலை மின் திட்டங்களில், முதலீடு செய்வதற்கு, ஆர்வம் காட்டுவர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜன-201909:27:19 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅறுபதினாயிரம் கோடி கடன் சுமையில் வாரியம் தள்ளாடும், பொழுது எப்பிடி ஆர்வம் காட்டுவார்கள் .. அதை தவிர மற்றவர்களுக்கு பகடி எப்பிடி கொடுப்பார்கள்..

Rate this:
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
12-ஜன-201908:32:52 IST Report Abuse

Chanemougam Ramachandiraneஅடிப்படையே தவறாக உள்ளது அரசிடம் உற்பத்திக்கான செலவு கொண்டு போவதற்கான செலவு எல்லாவற்றையும் பெற்று கொண்டு அரசு விற்பனை சேயும் போஸுது 5 ரூபா மேல் விற்கிறது அதுவே காற்றாலை உற்பத்தி செய்பவர்களிடம் 2.65 ரூபாய்என்றல் யார் முன் வருவர்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X