புதுச்சேரி ரயில் கிண்டியில் நிற்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி ரயில் கிண்டியில் நிற்கும்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னை கடற்கரை - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில், மாம்பலம் மற்றும் கிண்டியில் நிற்பது நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து, அதிகாலை, 5:35 மணிக்கு இயக்கப்படும் ரயில், காலை, 10:10 மணிக்கு, கடற்கரை ரயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து, மாலை, 5:35 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், இரவு, 10:25 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்.இந்த ரயில், கடற்கரை - தாம்பரம் இடையே, திரிசூலம் நிலையத்தில் மட்டும் நின்று சென்றது.
தற்போது இந்த ரயில் மாம்பலம் மற்றும் கிண்டி ரயில் நிலையங்களில், இம்மாதம் வரை நின்று செல்லும்.மேலும், கடற்கரை - தாம்பரம் இடையே, விரைவு மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் பாதையில் மாற்றி இயக்கப்படும் வரை, இந்த எக்ஸ்பிரஸ், மாம்பலம், கிண்டியில் நின்றுச் செல்லும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X