'பிளாஸ்டிக்' சோதனை அதிகாரிகள் மெத்தனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பிளாஸ்டிக்' சோதனை அதிகாரிகள் மெத்தனம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னையில், 'பிளாஸ்டிக்' சோதனையில், உணவு பாதுகாப்பு துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில், இந்தாண்டு ஜன., 1 முதல், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தால், அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
மாநகராட்சியுடன் இணைந்து, சோதனையில் ஈடுபட வேண்டிய, உணவு பாதுகாப்பு துறையினர், பிளாஸ்டிக் பறிமுதல் சோதனையில், மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், வணிக வளாகங்கள், மளிகை கடைகளில், பிளாஸ்டிக் சோதனையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், ஓட்டல்கள் போன்றவற்றில் கூட, பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையில், உணவு பாதுகாப்பு துறையினர் ஈடுபட மறுக்கின்றனர்.
10 நாட்களில், 50 டன் பிளாஸ்டிக், மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள், 5 டன் மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர்.மேலும், நாய்கறி இறைச்சி சர்ச்சையை தொடர்ந்து, இறைச்சிக் கடைகளில், உணவு பாதுகாப்பு துறையினர், சோதனையில் ஈடுபட மறுக்கின்றனர். இதனால், இறைச்சிக் கடைகளில், அதிகளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X