274 கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

274 கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், 2018 ஜன., முதல் டிச., வரையிலான காலக்கட்டத்தில், 274 கட்டுமான திட்டங்களுக்கும், 85 மனைப்பிரிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நகர், ஊரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங்களுக்கும், மனைப்பிரிவுகளுக்கும், ஒப்புதல் வழங்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., மேற்கொண்டு வருகிறது.இதற்கான விண்ணப்பங்களை பெறுவது முதல், ஒவ்வொரு கட்டத்திலும், பல்வேறு விதங்களில், கட்டுமான திட்டங்கள் ஆராயப்படுகின்றன.இதில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் திட்டங்களுக்கு, ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இந்த வகையில், 2018 ஜன., முதல் டிச., வரையிலான காலத்தில், 274 சிறப்பு கட்டடங்கள், 53 அடுக்குமாடி கட்டடங்கள், 48 நிறுவன கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 85 மனைப்பிரிவுகளுக்கும், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.2017ல், இம்மூன்று பிரிவிலும், 364 கட்டுமான திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 2018ல், இந்த எண்ணிக்கை, 274 ஆக குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்பட்ட எண்ணிக்கை, 33 சதவீதம் குறைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில், முன்பு எப்போதும் இல்லாத வகையில், பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு வருவதால், வரும் மாதங்களில், திட்ட அனுமதி எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, அங்கீகாரமில்லா மனைகளில், விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், லே அவுட் ஒப்புதல் வழங்குவது அதிகரித்துள்ளது.2017ல், 63 மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது, 2018ல், 85 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X