ஒரு நாள் போதுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு நாள் போதுமா?

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னையில் நடந்து வரும் புத்தகக்காட்சி, இந்தியாவிலேயே பெரியது. அது, பதிப்பகங்களுக்கான சந்தையல்ல; பல்வேறு துறை சார்ந்த நுால்களை ஒரே இடத்தில் பார்த்து, தேர்ந்தெடுக்கும் வாசகர்களுக்கான, 'அறிவுத்' திருவிழா. இதை, குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நாம் கொண்டாட வேண்டியது அவசியம்.
ஐந்தாறு மணி நேரத்தில், 800 அரங்குகளில், செறிந்த புத்தகங்களை தேடி எடுப்பது, பசுமையான மரத்தில் பச்சைப் பாம்பை தேடுவது போன்றது. கண்ணில் படுவது எல்லாம், நல்லதாகவே தோன்றும். கையில் உள்ள காசு கரைந்த பின், இதற்கு பதிலாக அதை வாங்கி இருக்கலாமே என்றும் தோன்றும்.
புத்தகம் தேடுவது சுலபமல்ல.முதலில் அரங்குகளில் உள்ள விலை பட்டியலை பார்த்து, நுால்களை தெரிவு செய்ய வேண்டும். அதற்காக, ஒரு நாள் செலவிட்டாலும் பரவாயில்லை.பின், மீண்டும் பொறுமையாக நுால்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் படிப்பதற்கு மட்டுமல்ல, ஓராண்டுக்கான விசேஷங்களுக்கு பரிசளிக்கவும், நுால்களை வாங்க வேண்டும். சிறந்த புத்தகங்களை, குழந்தைகளை வாங்கிக் கொடுப்பதைப் போலவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு முன் வாசிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்;
படித்த புத்தகங்களைப் பற்றிய சுவாரஸ்யங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களை, புத்தகக்காட்சியில் புத்தகங்களை தேர்ந்தெடுக்க வைத்து, எடுத்த புத்தகத்திற்கான காரணத்தை கேட்க வேண்டும்.விடுமுறை நாட்களில், குழந்தைகள் படிக்கவும் வரையவும் உரிய சூழலை நாம் அமைத்து தர வேண்டும்.பாடப்புத்தகங்கள் மட்டுமே குழந்தைகளின் ஆற்றலை, அறிவை, ஆளுமையை வளர்க்காது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
புத்தகங்கள், களைத்த மனதுக்கு புத்துணர்ச்சியையும், தோல்வியுற்ற மனிதனுக்கு நம்பிக்கையையும், உற்சாகமற்ற மனிதனுக்கு உத்வேகத்தையும் தரும்.இந்த பொங்கலை, நண்பர்கள், உறவுகள் மற்றும் குழந்தைகளுடன் சென்று, புத்தகக் காட்சியுடன் நிகழ்த்தப்படும் புத்தக வெளியீடு, குறும்பட வெளியீடு, எழுத்தாளர் - வாசகர்கள் விவாதங்களில் பங்கேற்று மகிழ்வோம். அதற்கு ஒரு நாள் போதாது என்றால் மிகையல்லவே.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X