உடற்தகுதி போட்டியில் பங்கேற்க கடலோர காவல் படை அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடற்தகுதி போட்டியில் பங்கேற்க கடலோர காவல் படை அழைப்பு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:இந்திய கடலோர காவல் படை சார்பில், நடைபெற உள்ள, உடற்தகுதி போட்டியில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆண்டுதோறும், பிப்., 1ம் தேதி, இந்திய கடலோர காவல்படை துவக்க தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பொது மக்களுடன் இணைந்து, பல்வேறு செயல்களில் கடலோர காவல்படை ஈடுபடும்.இந்த ஆண்டு, கடலோர காவல்படை உடற்தகுதி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜன., 27ம் தேதி, சென்னையில் உள்ள, வி.ஐ.டி., கல்லுாரியில், இந்த போட்டி நடக்கிறது. 'கார்ப்பரேட்' நிறுவன ஊழியர்கள், ஆயுதப்படை வீரர்கள், கல்லுாரி மாணவர்கள், மீனவர்கள், குழுவாக பங்கேற்கலாம்.இதில் பங்கேற்க விரும்புவோர், முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பதிவு செய்யப்படுகிறது.ஆர்வமுள்ளோர், cgfitnessopen@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரியிலும், 87620 30859, 94450 64064 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X