வாலிபருக்கு அரிய வகை எலும்பு கட்டி அறுவை சிகிச்சையில் அகற்றம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு அரிய வகை எலும்பு கட்டி அறுவை சிகிச்சையில் அகற்றம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:அரிய வகை எலும்பு கட்டியுடன், இடது கால் அகற்ற வேண்டிய நிலையில் இருந்த வாலிபருக்கு, அப்பல்லோவில் அறுவை சிகிச்சை வாயிலாக, கட்டி அகற்றப்பட்டுள்ளது.
வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர், ரிபாத் இக்பால், 19. இவர், இடது கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டு, நடக்க முடியாத நிலையில் இருந்தார். வங்கதேசம் மட்டுமின்றி, இந்தியாவில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.ஆனால், அவரது கணுக்காலில் வளர்ந்திருந்த, 'டெஸ்மோபிளாஸ்டிக் பைப்ரோமா' கட்டி, எலும்பை சிதைத்திருந்ததால், 'கால் அகற்ற வேண்டும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில், வாலிபர் அனுமதிக்கப்பட்டார். வாலிபரை பரிசோதித்த எலும்பியல் நிபுணர், டாக்டர் கோசிகன், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் கண்ணன் பிரேமா, டாக்டர் சஷி பூஷண், டாக்டர் அசோக் பரமேஸ்வரன் ஆகியோர், வாலிபருக்கு, கால் அகற்றுவதற்கு பதிலாக, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
டாக்டர் கோசிகன் கூறியதாவது:எலும்பில் உருவாகக்கூடிய கட்டி, அரிதான கட்டி. இந்த வாலிபருக்கு இருந்த, கிரிக்கெட் பந்து அளவிலான கட்டி அகற்றப்பட்டது.எலும்புகள், 25 சதவீதம் சிதைந்திருந்தன. தற்போது, 15 சதவீதம் எலும்புகள் வளர்ந்துள்ளன. எலும்புகள் மறுவளர்ச்சி பெற, மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, ரிபாத் இக்பாலால், இயல்பாக நடக்க முடிகிறது.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X