வண்டலூர் பூங்கா பொங்கலுக்கு ரெடி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வண்டலூர் பூங்கா பொங்கலுக்கு ரெடி

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தாம்பரம்:வண்டலுார் உயிரியல் பூங்காவில், காணும் பொங்கலுக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வண்டலுார் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும், 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும், காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, நுழைவுச் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதலாக, 20 நுழைவுச் சீட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.பார்வையாளர்கள், www.aazp.in என்ற இணையதளம், vadaloor zoo என்ற செயலி வாயிலாக, நுழைவுச் சீட்டு பதிவு செய்து கொள்ள, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்காக, பல இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் வசதிக்காக, கேளம்பாக்கம் சாலையில், கிரசண்ட் பல்கலை அருகிலும்; தேசிய நெடுஞ்சாலையில், வி.ஜி.பி., திடலிலும், வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வி.ஜி.பி., திடலில் உள்ள வாகன நிறுத்துமிடம், 17ம் தேதி மட்டுமே இயங்கும்.வாகன நிறுத்து மிடங்களில் இருந்து, பூங்காவிற்கு வந்து செல்ல, 14 முதல், 17ம் தேதி வரை, இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, பார்வையாளர்கள் பூங்காவிற்கு வந்து செல்ல வசதியாக, கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X