டயர், பிளாஸ்டிக் கொளுத்துவதை கண்காணிக்க மா.க., வாரியம் குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டயர், பிளாஸ்டிக் கொளுத்துவதை கண்காணிக்க மா.க., வாரியம் குழு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:'சென்னையில் போகி பண்டிகை அன்று, டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை கொளுத்துவோர் மீது, சுற்றுச்சூழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
போகி பண்டிகை, 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் போது, பாரம்பரிய மான முறையில், வீட்டில் உள்ள பழைய பொருட்களை கொளுத்தி, மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில், ரப்பர், டயர், பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், அதிக பனிப்பொழிவு காரணமாக, ஈரப்பதம் ஏற்பட்டு, காற்று மாசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், புகையில்லா போகி கொண்டாடும் வகையில், கிண்டியில் உள்ள, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில், 2018ல் போகி கொண்டாட்டத்தின் போது, அதிக ஈரப்பதம் காரணமாக, காற்றில், 386 மைக்ரோ கிராம் வரை, நச்சு பொருட்கள் கலந்திருந்தன.மேலும், அடர்ந்த புகை காரணமாக, ஒன்பது பன்னாட்டு விமானம் உட்பட, 16 விமானங்கள், சென்னையில் இருந்து, பெங்களூரு, ஐதராபாத், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால், புகை மண்டலம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன.இந்தாண்டு முதல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு, காவல் துறையுடன் இணைந்து, சென்னையில், ரோந்து பணியில் ஈடுபடுவர்.அப்போது, டயர், பிளாஸ்டிக் பொருட்கள் கொளுத்துவோர் மீது, சுற்றுச்சூழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X