'தி சென்னை சில்க்ஸ்' கட்டடத்திற்கு தடை இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தி சென்னை சில்க்ஸ்' கட்டடத்திற்கு தடை இல்லை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னை சில்க்ஸ் கட்டடம் கட்டுவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை, தி.நகரில், 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனம், புதிய கட்டடம் கட்டுவதற்கு, சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்தது.ஆய்விற்கு பின், 2018 ஜூனில், சி.எம்.டி.ஏ., திட்ட அனுமதி வழங்கியது. இதையடுத்து, கட்டடம் கட்டும் பணியை, தி சென்னை சில்க்ஸ் நிர்வாகம் துவக்கியது.திட்ட அனுமதியை எதிர்த்து, தி.நகரில் வசிக்கும், கண்ணன் பாலசந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், 'வழக்கில், முகாந்திரம் இல்லை' எனக்கூறி, தள்ளுபடி செய்தார்.இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது, நேற்று காலை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு, விசாரித்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X