குரூப் - 1 இலவச பயிற்சி நாளை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரூப் - 1 இலவச பயிற்சி நாளை துவக்கம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில், குரூப் - 1 தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பு, நாளை துவங்குகிறது.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழுமம், 'குரூப் - 1 தேர்வு, மார்ச், 3ம் தேதி நடக்கும்' என, அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து, வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள, செங்கல் வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில், நாளை, இலவச அறிமுக வகுப்பு துவங்குகிறது. வாரம் முழுவதும், வகுப்புகள் நடத்தப்படுவது மட்டுமல்லாமல், சனிக்கிழமைகளில் மட்டும், மாதிரி தேர்வுகள் நடத்த உள்ளனர்.
இந்த பயிற்சி வகுப்பை, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி,தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மை செயலர், ஜவஹர் நடத்த உள்ளார்.விருப்பமுள்ளோர், நாளை காலை, 10:30 மணிக்குள், நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண், 044 - 2643 0029 மற்றும் 86680 38347 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X