பனியும், வெயிலும் 2 வாரம் நீடிக்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனியும், வெயிலும் 2 வாரம் நீடிக்கும்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:'அடுத்த இரண்டு வாரங்களுக்கு பனியும், வெயிலும் நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேநேரம், எந்த ஆண்டும் இல்லாத வகையில், பனி வாட்டி எடுக்கிறது.பல இடங்களில், பகலிலும் நடுங்க வைக்கும் அளவுக்கு, குளிர் நிலவுகிறது. இரவு மற்றும் அதிகாலையில், மூடுபனியும், சில இடங்களில் உறைபனியும் உறைய வைக்கிறது.
இந்நிலையில், லேசான மழையாவது பெய்யுமா என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தென் சீன கடலில் உருவான, 'பபுக்' புயல், அந்தமான் பகுதிக்குள் நுழைந்து, வங்க கடலில் மிச்சமிருந்த ஈர பதத்தையும் உறிஞ்சி விட்டது.இதனால், மழைக்கான அனைத்து வாய்ப்புகளுக்கும், முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வரும், 24ம் தேதி வரையிலான, இரண்டு வார வானிலை கணிப்பு அறிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்டது. தமிழகத்தில், அடுத்து வரும் நாட்களில், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை உள்பட, எந்த விதமான மழை சூழல்களும் இல்லை.இதனால், பனியின் அளவு அதிகரிக்கும்; பகலில் மந்தமான வெயில் நீடிக்கும் என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X