விஜயபாஸ்கர், பன்னீருக்கு கமிஷன் மீண்டும், 'சம்மன்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விஜயபாஸ்கர், பன்னீருக்கு கமிஷன் மீண்டும், 'சம்மன்'

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி, துணை முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கு, மீண்டும், 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.
ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இதுவரை, 140க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், துணை முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை ஆகியோரிடம், விசாரணை நடத்த வேண்டி உள்ளது.
ஏற்கனவே, அவர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பல காரணங்களால், விசாரணை நடத்தப்படவில்லை. பொங்கல் விடுமுறையை ஒட்டி, வரும், 20ம் தேதி வரை, எந்த விசாரணையும் கிடையாது.வரும், 21ம் தேதி, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர்; 22ம் தேதி, தம்பிதுரை; 23ம் தேதி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதிலும் மாற்றம் வர வாய்ப்புள்ளது. வரும், 23ல், சென்னையில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு துவங்க உள்ளது.அதில், துணை முதல்வர் கலந்து கொள்வார் என்பதால், அவர் விசாரணைக்கு ஆஜராவதற்கு வாய்ப்பு குறைவு என, கூறப்படுகிறது.அதேபோல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில், நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை, 21ம் தேதி, விசாரணைக்கு வர உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X