நாகேஷ் போல் நடிக்க ஆசை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகேஷ் போல் நடிக்க ஆசை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நாகேஷ்  போல் நடிக்க ஆசை

தேனிஇசை, பாட்டு, ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு என சினிமாவின் அனைத்து துறைகளிலும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பும் இருந்து கொண்டே தான் வருகிறது. அந்த வரிசையில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பில் கோலோச்சிய நடிகர் நாகேஷ் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் பெரியகுளம் தாமரைக்குளத்தை சேர்ந்த துணை நடிகர் தாமரை சரவணன் 42.அவர் கூறியதாவது:பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன். தேனி அருகே காமக்காபட்டியில் பாரதிராஜாவின் கருத்தம்மா படப்பிடிப்பை பார்த்தேன். தியேட்டரில் பார்த்த சினிமாக்கள் அப்போது தான் புரிய துவங்கியது. அதனை தொடர்ந்து சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என, 'மேக்கப்' உதவியாளராக என் பயணத்தை துவக்கினேன்.நடிகை ஜெயசித்ராவின் உதவியாளராக இருந்தேன். சிறுசிறு வேலை பார்த்து கொண்டு நடிக்க வாய்ப்பு தேடினேன். முதல்முறையாக 'ஜெமினி' படத்தில் சிறுகதாபாத்திரம் கிடைத்தது. அதனை தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை, அன்னக்கொடி, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட படங்களில் நடித்தேன். இயக்குனர் லெனின் பாரதி அளித்த வாய்ப்பினால், எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 'காலா 'படித்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பில் நடிகர் நாகேஷ் போல சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பதே என லட்சியம் , என்றார். இவரை பாராட்ட 97896 41076

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X