எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி:தேனி அன்னஞ்சி அருகே என்.ஜி.ஓ., காலனியில் நேரு யுவகேந்திரா, வானவில் தொண்டு நிறுவனம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அழகு திட்ட மேலாளர் முகம்மது பாருக் தலைமை வகித்தார். அறக்கட்டளை இயக்குனர் ஆஜரா வரவேற்றார். நிதியாளர் சுரேஷ்குமார், உறுப்பினர்கள் உதயக்குமார், முத்துச்செல்வி, பாத்திமாபேகம் முன்னிலை வகித்தனர்.நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிங்கம் துவக்கி வைத்து எய்ட்ஸ் வராமல் தடுப்பது , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முகாம் நோக்கம் குறித்து விளக்கினார். நம்பிக்கை ஆலோசகர் ராஜா, போடி சுகாதார ஆய்வாளர் டி.ராஜா, ஊஞ்சாம்பட்டி ஊராட்சிச் செயலாளர் ரதவேல், ஊராட்சி முன்னாள் தலைவர் பிரகாஷ் பங்கேற்றனர். 50 பேரின் ரத்த மாதிரிகள் எச்.ஐ.வி., கிருமி தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. எவருக்கும் தொற்று இல்லை என உறுதியளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X