'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:மாணவர்களின் ஆராய்ச்சியை வெளிப்படுத்தும், 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' போட்டிக்கு விண்ணப்பிக்க, வரும், 20ம் தேதி வரை, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், 'ஸ்மார்ட் இந்தியா' திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி, நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு போட்டிக்கான பதிவுகள், ஆன்லைனில் நடந்து வருகின்றன.இன்ஜினியரிங், மருத்துவம், ரோபாட்டிக் உட்பட, பல்வேறு வகைகளில் ஆராய்ச்சி விபரங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கலாம்.
முதல் பரிசாக, 2.5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்கள் விபரங்களை, www.sih.gov.in என்ற இணையதளத்தில், 20ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X