பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் கொண்டாடும் பொங்கல் விழா: மன அழுத்தத்திற்கு, 'குட் பை'

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 போலீஸ் கொண்டாடும் பொங்கல் விழா: மன அழுத்தத்திற்கு, 'குட் பை'

பணிச் சுமையால், மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் போலீசார், அதிலிருந்து விடுபடும் வகையில், மாநிலம் முழுவதும், காவல் துறை சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
ராணுவத்திற்கு நிகரானது, தமிழக காவல்துறை. போலீஸ்காரர் ஒருவர் தாடி வளர்க்க வேண்டும் எனில், ஏற்க தகுந்த காரணங்களுடன் விண்ணப்பித்து, உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். ஒழுங்கீனமாக இருப்போர் மீது, துறை ரீதியான நடவடிக்கை பாயும். மேலும், போலீசாருக்கு பணிச்சுமை அதிகம்.
உயர் அதிகாரிகளின் எடுபிடி வேலை, 'டார்ச்சர்'போன்ற பிரச்னைகளையும், சந்திக்கின்றனர். இதனால், போலீசாரிடம், 'கொண்டாட்டம்' என்ற மனநிலை ஏற்படுவது இல்லை. குடும்பத்தில் பிரச்னை வெடிப்பதால், தற்கொலை செய்து கொள்கின்றனர்.


மன அழுத்தம்



மன அழுத்தத்தில் இருந்து, போலீசாரை விடுவிக்க, தமிழக அரசு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 'காவலர் நிறைவு வாழ்வு' என்ற, திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.இத்திட்டத்தின் கீழ், போலீஸ் அதிகாரிகள் பலர், பெங்களூரில் உள்ள, 'நிம்ஹான்ஸ்' என்ற, தேசிய மன நல மருத்துவம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சிநிறுவனத்தில் பயிற்சி பெற்று உள்ளனர். அவர்கள், மாநிலம் முழுவதும் சென்று, போலீசாருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.


குடியிருப்புகள்



இதன் தொடர்ச்சியாக, காவல் துறை சார்பில், சென்னையில், பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின.மாநிலம் முழுவதும், காவலர் குடியிருப்புகள் உட்பட பல்வேறு இடங்களில், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'பொங்கல் விழாவை எந்த இடங்களில் நடத்துவது என,கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். பணியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பொங்கல் விழா நடத்தப்படுகிறது' என்றனர்.


வேட்டியில், 'கலக்கிய'ஐ.பி.எஸ்., அதிகாரிகள்



காவல்துறை சார்பில் நேற்று, சென்னை, ஆவடியில், தமிழக சிறப்பு காவல் படை வளாகத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மனைவியுடன், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் பங்கேற்றார். சென்னை கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் ஷகில் அக்தர் உள்ளிட்ட, ஐ.பி.எஸ்., அதிகாரி களும் கலந்து கொண்டனர். விழாவில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், வேட்டி, சட்டை அணிந்து குதுாகலித்தனர். போலீசாருக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜன-201909:13:29 IST Report Abuse
Srinivasan Kannaiya லஞ்சத்தை மறந்தால் நன்றாக இருப்பார்கள்.. மக்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தாலே மகிழ்வுடன் இருப்பார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201905:24:59 IST Report Abuse
Bhaskaran ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாகப்பேசப்பட்ட தமிழ்நாடு காவல்துறை படிக்காத அரசியல்வாதிகளுக்கு சேவகம் செய்து தன்னுடைய நிலையை தாழ்த்திக்கொண்டது மீண்டும் அதன் இழந்த பெயரை எப்போது மீட்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X