கொய்யா சாகுபடியில் சாதிக்கும் பொறியியல் பட்டதாரி: வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் அசத்துகிறார் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொய்யா சாகுபடியில் சாதிக்கும் பொறியியல் பட்டதாரி: வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் அசத்துகிறார்

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 கொய்யா சாகுபடியில் சாதிக்கும் பொறியியல் பட்டதாரி: வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் அசத்துகிறார்

கம்பம்:தோட்டக்கலைத்துறை அறிமுகம் செய்துள்ள புதிய முறையைபின்பற்றி கொய்யா சாகுபடியில் அசத்தி வருகிறார் கீழ்சிந்தலச்சேரி பொறியியல் பட்டதாரி அருள்முருகன்.உத்தமபாளையம் அருகில் உள்ள கீழ்சிந்தலச்சேரியை சேர்ந்தவர் அருள்முருகன். இவர்2012 ல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி மற்றும் கம்ப்யூட்டர்வர்த்தகம் பார்த்த இவர், விவசாயத்தில் சாதிக்க எண்ணினார். விளைவு தனக்கு சொந்தமான தரிசு நிலத்தைபொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளார்.25 ஏக்கர் பரப்பில் கொய்யா, மாதுளை, தென்னை, நாவல், கொட்டை முந்திரி சாகுபடி செய்துள்ளார்.கொய்யா சாகுபடியில் தோட்டக்கலைத்துறை அறிமுகம் செய்த 'சி.ஆர்.ஏ., 'முறையை பின்பற்றி உள்ளார்.அதாவது 2 அடி அகலம் 2 அடி நீளம் இடைவெளியில் 1.5 அடி ஆழத்தில் நான்கு பக்கமும் குழி தோண்டி 2 அடி குழாய் வைப்பதாகும். பின்னர்அதன் சமவெளி மத்தியில் கன்றை நடவு செய்ய வேண்டும். நான்கு பக்கமும் உள்ள குழாய்கள் வழியாக எரு, பசுந்தாள்உரங்கள், அதன் மேல் மண் போட்டு மூட வேண்டும். பின்னர் குழாய்களை உருவி விட வேண்டும். இதனால் பயிர்களுக்குதொடர்ந்து இடைவிடாமல் சத்துகள் கிடைக்கும்.'சோலார் பேனல்'கள்இந்த முறையில் 4 ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்துள்ளார். எல்.49, ஆந்திரா பனாரஸ் ஆகிய ரகங்கள் இவர் நடவு செய்துள்ளார்.மின் பயன்பாட்டிற்காக 31 'சோலார்' பேனல்கள் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்துள்ளார். இதன்மூலம் 10 குதிரைசக்தி கொண்ட மோட்டார் பம்ப்செட் தண்ணீர் பம்பிங் செய்ய பயன்படுகிறது. விளைபொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்யதோட்டக்கலைத்துறை உதவியுடன் 'பேக் ஹவுஸ்' கட்டி வருகிறார். 'சோலார் 'அமைக்க ரூ. 5 லட்சம் மானியமாகவேளாண் பொறியியல் துறையும், 'பேக்ஹவுஸ் ' கட்ட தோட்டக்கலைத்துறை ரூ. 2 லட்சம் மானியமும் வழங்கியுள்ளது.அருள்முருகன் கூறுகையில், '' தந்தை தணிக்கை துறையில் வேலைபார்த்தவர். நானும் படிக்கும் போது வேலை பார்க்க எண்ணினேன். வேலைக்கும்போனேன். ஆனால் எனது எண்ணத்தை மாற்றி விவசாயத்தில் சாதிக்க வேண்டும் என வேலையை உதறிவிட்டு 4 ஆண்டுகளுக்குமுன் இறங்கினேன். தந்தை 4 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். நான் 25 ஏக்கராக உயர்த்தியுள்ளேன்.கொய்யா சாகுபடியில் சி.ஆர்.ஏ., அற்புதமான முறையாகும். ஏக்கருக்கு 8 டன் வரை கிடைக்கும். கெமிக்கல் பூச்சி மருந்து மற்றும் உரங்களை முடிந்தவரை தவிர்த்து இயற்கைவேளாண் முறைகளை பின்பற்றி வருகிறேன்,''என்றார்.உத்தமபாளையம் தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ‛சிஆர்ஏ என்பது புதிய முறையாகும். இதை அறிமுகம் செய்துள்ளோம்.கொய்யாவில் அதிக மகசூல் கிடைக்கும். கீழச்சிந்தலச்சேரியில் அருள்முருகன் இந்த முறையில் நல்ல மகசூல் எடுத்துவருகிறார்,'என்றனர்.-----------------படவிளக்கம் : கீழச்சிந்தலச்சேரியில் 'சிஆர்ஏ' முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொய்யா 2. கொய்யா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 'சோலார் பேனல்கள்'.3. அருள்முருகன்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hh -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201911:26:46 IST Report Abuse
hh vasathiya piranthu vasathiya life lead panna in that news vilambaram, satharanamnala it in that appreciate pannalam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X