கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அனுமதிக்கு ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அனுமதிக்கு ஆய்வு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கம்பம்:கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க அனுமதியை தர மத்திய, மாநில அரசுகளின் மருந்துக் கட்டுப்பாடு அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.மாவட்டத்தில் ரத்த வங்கி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, பெரியகுளம் தலைமை மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமே செயல்படுகிறது.போடி, கம்பம் அரசு மருத்துவமனைகளில 'பிளட் ஸ்டோரேஜ் பாயின்ட்' மட்டுமே உள்ளது. இந்நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையின் ஒட்டுமொத்த செயல்பாடு, ஆண்டிற்கு ரத்தம் பயன்படுத்துவதன் அடிப்படையிலும், இங்கு ரத்த வங்கி அமைக்க மாநில நல்வாழ்த்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வதிகளையும் கொண்ட குளிரூட்டப்பட்ட அறை தயார் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மத்திய மருந்து கட்டுப்பாடு அலுவலர் ஹரிபாபு தலைமையில் மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாடு பிரிவு அலுவ லர்கள், கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமையும் அறையை ஆய்வு செய்தனர். மருத்துவ அலுவலர் ஜெ.பொன்னரசன் கூறுகையில், '300 யூனிட் ரத்தம் சேகரித்து வைக்கும் திறன் கொண்ட ரத்த வங்கி அமைய உள்ளது. இதற்கென மத்திய,மாநில மருந்துகட்டுப்பாடு ஆய்வாளர்கள் ஆய்வை முடித்துள்ளனர். இனி அறிக்கை மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு துறை மூலம் மத்திய அரசின் டைரக்டர் ஜெனரல் ஆப் டிரக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அனுமதி தருவர். மேலும் ரத்த வங்கிக்கு ஒரு லேப் டெக்னீசியன் பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X