ரூ.17 லட்சம் மோசடி புகார்: வியாபாரி மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.17 லட்சம் மோசடி புகார்: வியாபாரி மீது வழக்கு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


கம்பம்:திருச்சியை சேர்ந்தவர் ராஜா வெங்கடசுப்ரமணியன். இவர் கம்பம் அரசு பஸ் பணிமனை அருகில் வாழைப்பழ கமிஷன் கடை வைத்திருந்தார். மும்பை மொத்த வாழைப்பழ வியாபாரி இந்தர்பால்சிங்கிற்கு தொடர்ச்சியாக வாழைப்பழம் அனுப்பி வந்துள்ளார். முன்பணமாக ரூ. 17 லட்சத்தை மும்பை வியாபாரி, தந்துள்ளார்.ஆனால் பணம் பெற்ற பிறகு பழம் அனுப்புவதை நிறுத்தினார். பலமுறை போனிலும் ஆட்களை அனுப்பி கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இந்தர்பால்சிங், கம்பம் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு,இன்ஸ்பெக்டர் உலகநாதன் விசாரிக்கிறார். கம்பத்தில் உள்ள ராஜாவெங்கடசுப்ரமணியனின் கமிஷன் கடை, அலுவலகம் பூட்டிக்கிடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X